For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வசுந்தராஜி, குண்டா இருக்கீங்க… வாயை விட்டு சர்ச்சையில் சிக்கிய சரத் யாதவ்

Google Oneindia Tamil News

Recommended Video

    வசுந்தராஜி, குண்டா இருக்கீங்க, சர்ச்சையில் சிக்கிய சரத் யாதவ்-வீடியோ

    ஆல்வார்: ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் உடல் அமைப்பு குறித்து மூத்த அரசியல் தலைவர் சரத் யாதவ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    யாருக்கு அரியணையை தரலாம் என்று வாக்காளர்கள் முடிவெடுத்துள்ள நிலையில், அவரின் இந்த பேச்சு இறுதிக்கட்டத்தில் யாருக்கு பாதகமாக முடியும் என்று தெரியவில்லை.

    vasundhara raje has become fat, needs rest: sharad yadav

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆல்வார் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் லோக்தந்திரிக் ஜனதாதளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் பேசினார். மிக ஆவேசமாக பேசிய அவர், ஒரு கட்டத்தில் தரம் தாழ்ந்து உரையாற்ற கூட்டத்தில் இருந்தவர்கள் நெளிய ஆரம்பித்தனர்.

    அப்படி என்ன அவர் பேசினார். இது தான் அந்த பேச்சின் சுருக்கம்... மக்களே, வசுந்தரா அவர்களுக்கு ஓய்வு கொடுங்க... அவங்க டயர்டா ஆயிட்டாங்க... கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒல்லியாக இருந்தாங்க... ஆனா இப்ப ரொம்பவும் குண்டா வேற இருக்காங்க... மத்திய பிரதேசத்தின் மகளாக இருந்த அவங்க இனிமே ஓய்வெடுக்கலாம்...

    பேச்சின் இடையே நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுவதாகவும் சரத் யாதவ் கொளுத்தி போட்டார். ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மிகவும் குண்டாக இருப்பதாக வெளியான சர்ச்சை வீடியோவால் கடுப்பான பாஜக, கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முக்கிய தலைவர் ஒட்டு மொத்த ராஜஸ்தான் மக்களையும் அவர் அவமானப்படுத்தி விட்டதாக தெரிவித்தார். ஒரு முன்னணி அரசியல்வாதியான சரத் யாதவ் இவ்வாறு பேசி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

    English summary
    Former janata dal (United) leader Sharad Yadav stoked a controversy after he said Rajasthan Chief Minister Vasundhara Raje “has become too fat and needs to rest”. The BJP slammed Sharad Yadav for his comments and said that his statement is an insult to the women of Rajasthan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X