For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸில் வீரப்ப மொய்லி கலகக் குரல்- கர்நாடகா வேட்பாளர்கள் தேர்வில் பணம் விளையாடுவதாக புகார்!

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் மொய்லி.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸில் வீரப்ப மொய்லி கலகக் குரல்- பணம் விளையாடுவதாக புகார்!

    பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸும் மீண்டும் அரியணை ஏற பாஜகவும் தீவிரம் காட்டுகின்றன.

    Veerappa Moily tweets on money power in candidate selection

    இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவரான வீரப்ப மொய்லி தமது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும் மாநில பொதுப்பணித்துறை அமைச்சரும் அவருடன் ஒப்பந்ததாரர்களும் இணைந்து வேட்பாளர்களை தீர்மானிப்பதை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது எனவும் குமுறியிருக்கிறார் மொய்லி. இந்த ட்வீட் அப்படியே மொய்லி மகன் ஹர்ஷா மொய்லியின் ட்விட்டர் பக்கத்திலும் போடப்பட்டுள்ளது. அத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கும் இப்பதிவு டேக் செய்யப்பட்டிருக்கிறது.

    English summary
    A tweet by senior Congressman, Veerappa Moily has raised eyebrows. While slamming the process in which candidates are selected, he came down heavily on the role of money power in politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X