For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும்- வெங்கைய்யா நாயுடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18 வரை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி கூடுகிறது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 22ம்தேதி கூடியது. அன்றைய கூட்டத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.

பிப்ரவரி 25ம்தேதி ரயில்வே பட்ஜெட்டும், 29ம்தேதி 2016-17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வாக நடத்தப்பட்டது. முதலாவது அமர்வு பிப்ரவரி 22ம்தேதி முதல் மார்ச் 16ம்தேதி வரையும் 2வது அமர்வு ஏப்ரல் 25ம்தேதி முதல் மே 13ம்தேதி வரையும் நடைபெற்றன.

மழைக்கால கூட்டத் தொடர்

மழைக்கால கூட்டத் தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது என டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா

இந்த கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நீண்ட காலமாக நிறைவேறாமல் நிலுவையில் உள்ளது.

அதிகரித்த பலம்

அதிகரித்த பலம்

தற்போது அரசுக்கு ராஜ்யசபாவில் பலம் அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் சிலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களும் ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன.

வெங்கைய்யா நாயுடு

வெங்கைய்யா நாயுடு

நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி மசோதா இந்த மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.

நிலுவையில் உள்ள மசோதாக்கள்

நிலுவையில் உள்ள மசோதாக்கள்

ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் நிலுவையில் உள்ள பொது மருத்துவ நுழைவுத்தோர் (NEET) மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதிநாளில் தெரியவரும்

இறுதிநாளில் தெரியவரும்

எதிர்க்கட்சிகளின் அமளி, ஒத்திவைப்புகளுக்கு இடையே நிலுவையில் உள்ள எத்தனை மசோதாக்கள் நிறைவேறுகின்றன என்பது கூட்டத் தொடரின் இறுதி நாளில் தான் தெரியவரும்.

English summary
Venkaiah Naidu, Parliamentary Affairs Minister, on Wednesday said that the government is in the favour of passing GST in the Monsoon Session.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X