For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துணை குடியரசுத் தலைவர் தேர்தல்.. 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கையா நாயுடு வெற்றி!

துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரி பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஆளும் பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

 Venkaiah Naidu has won in the Vice Presidential election

இந்நிலையில் புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்தனர்.காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

98.21 சதவீத வாக்குப்பதிவு

இந்த தேர்தலில் 98.21 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் உள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகியுள்ளது.வாக்கம் எண்ணும் பணி நிறைவு
இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இந்நிலையில் வாக்குகளை எண்ணும் பணி நிறைவடைந்து குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

வெங்கையா நாயுடு வெற்றி

அதன்படி எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியை விட 272 அதிக வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளார். அவர் 516 வாக்குகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகளையும் பெற்றனர். வெங்கையா நாயுடு விரைவில் குடியரசுத் தலைவராக பதவியேற்கவுள்ளார்.

பாஜகவினர் கொண்டாட்டம்

வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதை பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். வெங்கையா நாயுடுவுக்கு பாஜக மற்றும் ஆதரவு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
BJP candidate Venkiah Naidu has won in the Vice Presidential election.Voting for the vice presidential election ended Saturday evening with 98.21 per cent of members of Parliament exercising their franchise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X