For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னியாஸ்திரி பலாத்காரத்துக்கு கவலைப்படும் போப் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்க கூடாது: வி.ஹெச்.பி.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கவலைப்படும் போப் ஆண்டவர் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்காமல் இருக்கட்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் நாடியாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:

கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் தாக்குதல் கிறிஸ்தவர்களின் கலாசாரம். அது இந்துகளின் கலாசாரம் இல்லை. போப் ஆண்டவரின் வாடிகனுக்கு பலாத்காரம் தொடர்பாக 5 ஆயிரம் புகார்கள் வந்திருக்கின்றனவே...

VHP defends attack on Haryana church, says rape of nuns is 'Christian culture'

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் போப் கவலை அடைந்திருந்தார் என்றால் ஓரினசேர்க்கையை ஊக்குவிப்பதை அவர் முதலில் நிறுத்தட்டும்.

ஹிசாரில் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டது என்பது மக்களின் தன்னிச்சையான எதிர்ப்புதான்.. அக் கிராமத்தில் கிறிஸ்தவர்கள் யாரும் வசிக்கவில்லை. கிறிஸ்தவ ஆலயம் இடிக்கப்பட்ட பகுதியை சுற்றிலும் கிறிஸ்தவர்கள் கிடையாது. பிறகு ஏன் அங்கு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட வேண்டும்?

கிறிஸ்தவர்கள் வாடிகனில் ஹனுமான் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளிப்பார்களா? அவர்கள் முதலில் இதனை அனுமதிக்கட்டும். பின்னர் இந்தியாவில் எந்தபகுதியில் வேண்டுமென்றாலும் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்ய நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் நிதியும் வழங்குவோம்.

கிறிஸ்தவர்கள் தேவாலயங்களை கட்டுவதை நிறுத்தவில்லை என்றால் கி.பி. 1857 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது போல் மீண்டும் ஒரு மதகலவரம் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு சுரேந்திர ஜெயின் கூறினார்.

English summary
VHP joint general secretary Surendra Jain on Monday defended the demolition of a church in Hisar, Haryana, asking whether Christians would allow construction of a Hanuman temple in Vatican City.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X