For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் விஎச்பி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்கிறது விஎச்பி.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்க இருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

டெல்லியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் அலோக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

VHP set to re-start Ram Mandir movement

விஸ்வ ஹிந்து பரிஷத் ஆலோசனைக் கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. ஒன்று பசு பாதுகாப்பு தொடர்பானது.

மற்றொன்று ரோஹிங்கியா முஸ்லிம்களின் ஊடுருவல் தொடர்பானது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். ஜூலை மாதம் முதல் இவ்வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எங்கள் விருப்பம்.

அந்த பகுதிக்கு வெளியே இஸ்லாமியர்கள் மசூதியை கட்டிக் கொள்ளலாம். சர்ச்சைக்குரிய இடத்தில் சட்டப்படியே ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இது தொடர்பாக மதத் தலைவர்களிடமும் ஆலோசனை நடத்துவோம்.

இவ்வாறு அலோக்குமார் கூறினார்.

English summary
The Vishwa Hindu Parishad indicated it may restart its movement for Ram Temple in Ayodhya, saying the organisation will consult saints on the "future course of action" if the Supreme Court does not give its verdict on the issue in next three to four months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X