For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குல்பூஷன் குடும்பத்திடம் பாகிஸ்தான் மனிதாபிமானமற்று செயல்பட்டுள்ளது... வெங்கையா நாயுடு கண்டனம்

குல்பூஷன் குடும்பத்திடம் பாகிஸ்தான் மனிதாபிமானமற்று செயல்பட்டுள்ளது என்று துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: குல்பூஷன் குடும்பத்திடம் பாகிஸ்தான் மனிதாபிமானமற்று செயல்பட்டுள்ளது என்று துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் மரண தண்டனை கைதியாக இருக்கிறார் குல்பூஷன் ஜாதவ். இவர் இந்தியாவில் கடற்படை அதிகாரியாக இருந்தவர். இவர் பாகிஸ்தானில் இருந்த போது உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார்.

Vice President condemns Pakistan actions against Kulbhushan’s family

இவரது மரண தண்டனை சர்வதேச நீதிமன்றத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஜாதவ் சில நாட்களுக்கு முன் தன் குடும்பத்தினரை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது ஜாதவின் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி ஆகியோர் பாகிஸ்தான் அதிகாரிகளால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார். சேத்தன்குல்லின் தாலி, வளையல், தோடு ஆகியவற்றை கழட்ட சொல்லி உள்ளனர். இதுமட்டும் இல்லாமல் பாகிஸ்தானில் பெண்கள் இருப்பது போல் தலையை சுற்றி புடவையை சுற்றிக்கொள்ள சொல்லியுள்ளனர்.

பாகிஸ்தானின் இந்த செயலுக்கு தற்போது துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் '' பாகிஸ்தானின் செயல் கொஞ்சம் கூட மனித தன்மையற்றது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Pakistan claimed Jadhav (a) Hussein Mubarak Patel and arrested him. He was arrested from its restive Balochistan province on March 3 in 2016. India says that Jadhav was kidnapped from Iran. Jadhav met his family members in Pakistan. In this meeting Jadhav's wife has been forced to remove her mangal sutra and bindhi. Vice President condemns Pakistan actions against Kulbhushan’s family. He says that Pakistan did inhumanitarian action against Jadhav's family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X