For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் இளைஞரை தாக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ மகனை பாராட்டிய பிரகாஷ் ராஜ்.. உண்மை என்ன?

அப்பாவி இளைஞரை துரத்தி துரத்தி தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ மகனை பிரகாஷ் ராஜ் பாராட்டிய வீடியோ வெளியாகி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இளைஞரை தாக்கிய எம்.எல்.ஏ மகன், பாராட்டிய பிரகாஷ்ராஜ்..!!- வீடியோ

    பெங்களூர்: அப்பாவி இளைஞரை துரத்தி துரத்தி தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ மகனை பிரகாஷ் ராஜ் பாராட்டிய வீடியோ வெளியாகி இருக்கிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    தற்போது கர்நாடகாவில் தேர்தல் ஜுரம் அதிகம் ஆகிவிட்டது. பல தேசிய தலைவர்கள் அங்கே தேர்தலுக்காக களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இரண்டு நாட்கள் முன்பு அங்கு மோடியும், அமித் ஷாவும் வந்தார்கள். தற்போது பிரகாஷ் ராஜ் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரல் ஆகி இருக்கிறது.

     என்ன ஆனது

    என்ன ஆனது

    கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.ஏ.ஹாரிஸின் மகன் முகமது நாலாபத், டாலர் காலனி பகுதியை சேர்ந்த வித்வாத் என்பவரை மோசமாக தாக்கி இருக்கிறார். 0 பேர் சேர்ந்து மாற்றி மாற்றி அவரை அடித்துள்ளனர். அவரை அடிப்பதை புகைப்படமும் எடுத்துள்ளனர். தாக்கப்பட்ட நபர் தற்போது மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

     கைது செய்யப்பட்டார்

    கைது செய்யப்பட்டார்

    அவரை விடாமல் மீண்டும் அந்த நபரை நாலாபத் தாக்கி இருக்கிறார். மருத்துவமனைக்கு தொடந்து சென்று தாக்கி உள்ளார். தற்போது நாலாபத் கைது செய்யப்பட்டுள்ளார். 14 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டுள்ளார். நாளை இவர் பெயில் மீதான விசாரணை நடைபெற இருக்கிறது.

    வீடியோ

    நாலாபத்தை பிரகாஷ்ராஜ் பாராட்டும் வீடியோ வெளியாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த விழா ஒன்றில் பிரகாஷ்ராஜ் ''நாலாபத் மிகவும் நல்லவர். அவரை அவரது தந்தை மிகவும் நன்றாக வளர்த்து இருக்கிறார். அவர் நிறைய ஏழைகளுக்கு நல்லது செய்கிறார்'' என்று நாலாபத் குறித்து பேசியுள்ளார்.

    கோபம்

    இந்த வீடியோ வைரல் ஆகி பிரச்சனை ஆனது. தற்போது பிரகாஷ்ராஜ் ''இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் சமுதாயம் இதுபோன்ற வன்முறைகளை சகித்துக் கொள்ள கூடாது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நாலாபத்திற்கு எதிராக பேசியுள்ளார்.

    English summary
    A FIR has been registered against Bengaluru District Youth Congress General Secretary Mohammed Haris Nalapad and ten others for allegedly beating up a person in a restaurant in Bengaluru's UB City & threatening him at a hospital where he later went for treatment. Video of Prakash Raj's links with MLA Haris' Son becomes viral. Now he says that I strongly condemn this act and strongest action should be taken against such acts. our society can not tolerate such arrogance who ever he is.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X