For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை நம்மை எப்படி பார்க்கிறது? நீங்களே பாருங்க!

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை எப்படி நம்பை பார்க்கிறது என்பதற்கு இந்த வீடியோவை சாட்சி... நீங்களே பாருங்கள்

விலங்குகளில் புத்திசாலியான விலங்கு. யானை மனிதர்களை தேடி வந்து ஒரு போதும் தாக்காது. ஆனால் யானையின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன.

அப்படிப்பட்ட சூழலில் சில கொடூரர்கள் யானைகளை தங்களின் சுயநலத்திற்காக மின்சார வேலிகளை வைத்து யானைகளை கொல்கிறார்கள். அண்மையில் டயரில் நெருப்பை பற்றவைத்து யானை சிலர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மசினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய சம்பவம்.. தங்கும் விடுதிக்கு சீல் வைத்த ஆட்சியர் மசினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய சம்பவம்.. தங்கும் விடுதிக்கு சீல் வைத்த ஆட்சியர்

கரைசேர்ந்த யானை

கரைசேர்ந்த யானை

உண்மையில் யானைகள் மிகவும் நல்லவை. புத்திசாலியும் கூட. தன்னை கண்ணாடியில் அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய விலங்கு யானைகள் மற்ற விலங்குகளுக்கு உதவும் குணம் கொண்டவையாகும். காட்டில் குளித்துக் கொண்டிருந்தவர் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதால் தெரிந்ததால் ஓடிச் சென்று உதவி அவரை கரை சேர்த்துள்ளது யானை.

முதலை

முதலை

இதேபோல் பல முறை யானைகள் மனிதர்களுக்கு உதவி உள்ளது. முன்பு ஒரு முறை முதலையிடம் சிக்கிய காட்டு மாட்டை ஒரு யானை காப்பாற்றியது. இதுபற்றிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

செங்குத்தான பாதை

செங்குத்தான பாதை

யானைகள், மனிதர்களை அடையாளம் காண வல்லவை. பொதுவாக யானைக ஊனமுற்றோரை தாக்குவதில்லை என்று சொல்கிறார்கள். யானைகள் செங்குத்தான பாதைகளிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும். கூட்டமாக வரும் யானைகளால் ஆபத்துக்கள் குறைவு. ஒன்றை யானை மட்டும் தனியாக வலம் வரும் போது தான் அவை தன்னை சீண்டுபவர்களை தாக்கிவிடும். குட்டி யானை அல்லது தாய் யானை இறந்தால் அந்த இடத்தைவிட்டு செல்லாமல் கதறி அழுது அங்கேயே வட்டமடிக்கும் குணம் உடையவை யானைகள். மனிதர்களை போல் இறந்த யானைகளுக்காக அவை துக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

உணர மறுக்கும் மனிதன்

மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக, இயற்கை சமநிலையைச் சிதைத்து காடு, மலைகளை அழித்து, பல முக்கிய பகுதிகளில் பல்லுயிர் பெருக்கத்திற்குக் கள்ளிப்பால் ஊற்றிவிட்டார்கள்.காடுகளை அழித்து தனக்கு தேவையான சொகுசு பங்களாக்களை, பணம் தரும் தேயிலை காடுகளை உருவாக்கிவிட்டார்கள். உண்மையில் பணம் தரும் தேயிலை காடுகளை பசுமை பாலைவனம் என்று வேண்டுமானால் அழைக்கலாம். இப்படி தனக்கு வேண்டியதற்காக காடுகளை அழித்த காரணத்தால் தான் அங்கே தங்களுக்கான வசதிகளுடன் சுற்றித் திரிந்த யானை உள்ளிட்ட விலங்குகள், வழி மாறி, உணவு, தண்ணீர் தேவைக்காகக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன. மோதல்களும் நடக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

English summary
video: That's how elephants treat us! How do we treat them? Think. .animals are showing compassion towards humans... but we fails to sustain it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X