For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராகிறார் வித்யாசாகர் ராவ்?

தமிழகத்தின் நிரந்தர கவர்னராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தின் நிரந்தர கவர்னராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய ஆளுநர் நியமிக்கப்படாததால் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்தது.

Vidyasagar Rao is likely to be made the permanent Governor of Tamil Nadu

இந்நிலையில் தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக வித்யாசாகர் ராவை நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர்களுக்கான பட்டியலை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஏற்கனவே தயாரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குப் பிறகு அமைச்சரவை மாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என்றும் இதைத்தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது,

வித்யாசாகர் ராவ் தற்போது மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ளார். தமிழ்நாட்டிற்கு ஒரு புதிய முகத்தை கண்டுபிடிப்பதற்கு பதிலாக,வித்யாசாகர் ராவையே நிரந்தரமாக்கலாம் என பாஜக வட்டாரங்கள் கருதுவதாக தெரிகிறது.

இது தவிர, பீகார், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களிலும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவிலும் கவர்னரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஏற்கனவே கவர்னர்கள் பட்டியலை தயார் செய்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த பிரச்சினையை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற அமர்வு முடிந்த பின்னர் அமைச்சரவை மாற்றியமைக்க அரசாங்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஏற்கனவே கவர்னர்கள் பட்டியலை தயார் செய்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இதுகுறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்னர் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Vidyasagar Rao is likely to be made the Full time Governor of Tamil Nadu. A decision to this effect is expected after August 11 when the Cabinet reshuffle is likely to take place. Vidyasagar Rao currently is the Governor of both Maharashtra and Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X