For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பே வாக்காளர்களுக்கு மை, பணம்.. பாஜக மீது கிராமத்தினர் புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக மீது கிராமத்தினர் புகார்

    சந்தாலி: உ.பி. மாநிலம் சந்தாலியில் உள்ள கிராமப் பகுதியில் தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பே வந்த பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு கையில் மையும் வைக்கப்பட்டதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.

    நாட்டு மக்களே பெரிதும் எதிர்பார்க்கும்படியான தேர்தல் திருவிழா இன்றோடு முடிவடைகிறது. இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் சந்தாலி தொகுதிக்குள்பட்ட தாரா ஜிவன்பூர் கிராமத்தினர் பரபரப்பு புகாரை அளித்துள்ளனர். அதில் நேற்று இரவு பாஜகவினர் 3 பேர் தங்கள் கிராமத்துக்கு வந்தனர்.

    4 சட்டசபை இடைத்தொகுதிகளுக்கு நடுவிரலில் மை வைக்கும் அதிகாரிகள் 4 சட்டசபை இடைத்தொகுதிகளுக்கு நடுவிரலில் மை வைக்கும் அதிகாரிகள்

    பணம்

    பணம்

    அவர்கள் கிராம மக்களின் கை விரல்களில் கட்டாயப்படுத்தி மை வைத்துவிட்டு ரூ 500 பணத்தை கொடுத்தனர். பின்னர் பாஜகவுக்கு நாங்களே வாக்களித்துவிடுகிறோம். நீங்கள் வரத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.

    மிரட்டல்

    மிரட்டல்

    மேலும் நீங்கள் வந்தாலும் வாக்களிக்க முடியாது. இந்த விஷயத்தை யாரிடமும் கூறக் கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால் வாக்காளர்கள் அச்சமடைந்த போதிலும் ஒரு சிலர் முன்வந்து புகார் அளித்துள்ளனர்.

    புகார்

    புகார்

    இதனால் வாக்களிக்க முடியாமல் தவித்த கிராமத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து சந்தாலி மாவட்ட ஆட்சியர் ஹர்ஷ் கூறுகையில் காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    தெளிவாக கூறுங்கள்

    கிராமத்தினர் கொடுத்த புகாரின் பேரில் நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். அவர்கள் வாக்களிக்க முடியும். முதல் தகவல் அறிக்கையில் கட்டாயப்படுத்தி தங்கள் விரலில் மை வைத்தாக மக்கள் தெளிவாக கூற வேண்டும் என தெரிவித்தார்.

    English summary
    Residents of Tara Jivanpur village, UP, allege ink was forcefully applied to their fingers & they were given Rs 500 yesterday by 3 BJP men of their village.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X