For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சூனியக்காரி" என்று சொல்லி.. ஊருக்கு நடுவில்.. விதவை பெண்ணை கட்டி வைத்து.. கொடுமை

விதவை பெண்ணை கட்டி வைத்து தாக்கி உள்ளனர் கிராம மக்கள்

Google Oneindia Tamil News

காந்தி நகர்: ஒரு விதவை பெண்ணை, சூனியக்காரி என்று சொல்லி, கிராமமே அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

வட மாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகமாகி கொண்டே வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் மனித நேயம் முற்றிலும் காணாமல் போய்விட்டன.

 village people attacked tribal widow, and police rescued in gujarat

அரக்க குணமும், பிற்போக்குத்தனமும், மூடத்தனங்களில் இன்னும் நிறைய கிராம மக்கள் சிக்கி கொண்டுள்ளனர்.. அந்த வகையில் குஜராத்தின் ஒரு கிராமத்தில் மிக மோசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அந்த கிராமத்தில் ஒரு பழங்குடி பெண் தனியாக வசித்து வந்துள்ளார்.. அவருக்கு 36 வயதாகிறது.. கணவன் இறந்து 6 வருஷத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.. ஆனால், தன்னுடைய கணவரை, இந்த பெண்ணே மாய, மந்திரம் செய்து கொன்றுவிட்டார் என்று அந்த கிராம மக்கள் சொல்லி வந்துள்ளனர்.

எப்போது பார்த்தாலும் இவரை சூனியக்காரி என்று சொல்லி, வீண் பழிகள், குற்றங்களை சொல்லியபடியே இருந்தனர்.. இது எல்லை மீறியும் நடந்து, ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.

அந்த கிராமத்தில் இருந்தால், தங்களுக்கு ஆபத்து என்று சொல்லி அந்த பெண்ணை ஊரைவிட்டு போகுமாறும் வற்புறுத்தியிருக்கிறார்கள்.. தனக்கு வேறு போக்கிடம் இல்லை என்று கண்ணீருடன் சொல்லி அழுதுள்ளார்..
2 நாளைக்கு முன்புகூட, ஊரை விட்டு போகும்படி துரத்தி உள்ளனர்.. அந்த விதவை பெண் மறுக்கவும், ஊருக்கு நடுவில் தூணில் அவரை கிராம மக்கள் கட்டி வைத்து, சரமாரியாக அடித்தனர்.

இவை சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது? கொரோனா பற்றிய மோடி பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடிஇவை சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது? கொரோனா பற்றிய மோடி பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி

ஒட்டுமொத்த ஊரும் கட்டி வைத்து அடித்ததால், வலி பொறுக்க முடியாமல், அந்த பெண் கதறி அழுதுள்ளார்.. இந்த தகவல் உடனடியாக தன்னார்வலர் நிறுவனத்திற்கு சொல்லப்படவும், அவர்கள் விரைந்து வந்தனர்.. அதற்குள் உடம்பெல்லாம் ரத்த காயங்களுடன் அந்த பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.. அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை தந்தனர்.

மூட நம்பிக்கை காரணமாக சூனியக்காரி என்று தூற்றிய கிராம மக்களை தன்னார்வல நிறுவன ஊழியர்கள் எச்சரித்ததுடன், உடனடியாக போலீசுக்கும் தகவல் சொன்னார்கள். இது சம்பந்தமாக போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

English summary
village people attacked tribal widow, and police rescued in gujarat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X