For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம், வெள்ளி திருட்டு போனாலும் பரவாயில்லை.. ஆனால் தண்ணீர்.. டிரம்களுக்கு பூட்டுபோட்ட கிராமத்தினர்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தங்கம், வெள்ளியை போல் தண்ணீரையும் பூட்டி வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பரவலான ஆங்காங்கே கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் நீர் நிலைகள் வறண்டு விட்டன. நிலத்தடி நீரும் காணப்படுவதில்லை.

இதனால் தண்ணீருக்காக அந்த மாநில மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் மாநிலத்தின் சூரு உள்ளிட்ட பகுதிகளில் 50 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

கைவிரித்த அதிமுக.. குஜராத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்கைவிரித்த அதிமுக.. குஜராத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பெரிய டிரம்கள்

பெரிய டிரம்கள்

பில்வாராவில் உள்ள பரஸ்ராம்புரா கிராமத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு வரும் நீரை அப்பகுதி மக்கள் பெரிய டிரம்களில் பிடித்து வைத்துக் கொள்கின்றனர்.

வினோதம்

வினோதம்

அவ்வாறு பிடித்து வைக்கும் நீரை இரவு நேரங்களில் சிலர் திருடி வருவதாக புகார்கள் எழுந்தன. கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து தண்ணீரை சேமித்தால் இது போல் திருடிவிடுகின்றனர் என்பதால் அப்பகுதி மக்கள் வினோதமான யோசனையை கையில் எடுத்துள்ளனர்.

பூட்டி வைத்தல்

பூட்டி வைத்தல்

பிடித்து வைத்திருக்கும் தண்ணீர் இருக்கும் டிரம்களுக்கு பூட்டு போட்டு வைத்துள்ளனர். ஏங்க தண்ணீரை போய் பூட்டி வைப்பதா என அந்த கிராமத்தினரிடம் கேட்கப்பட்டது.

விலை உயர்ந்த பொருள்

விலை உயர்ந்த பொருள்

அதற்கு அவர்கள் கூறுகையில் தங்கம், வெள்ளியை காட்டிலும் தண்ணீர் மிகவும் பொக்கிஷமாகும். தங்கம், வெள்ளி காணாமல் போய்விட்டாலும் நினைத்தவுடன் வாங்கிக் கொள்ளலாம்.

காசு கொடுத்தாலும் கிடைக்காது

ஆனால் தண்ணீர் திருடுபோய்விட்டால் தற்போது அடிக்கும் வெயிலுக்கு அது பணம் கொடுத்தாலும் கிடைக்காது. எனவே நாங்கள் பூட்டி வைக்கிறோம் என்கின்றனர் கிராம மக்கள்.

English summary
Parasampura village in Rajasthan are now keeping their water containers locked in order to curb theft of drinking water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X