For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாயின் கண்முன்னே சிறுவனை கடித்து கொன்று தின்ற சிறுத்தை.. காட்டை எரித்து சாம்பலாக்கிய கிராம மக்கள்!

உத்ரகாண்டில் சிறுவனை சிறுத்தை கொன்றதையடுத்து கிராம மக்கள் காட்டிற்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தாயின் கண் முன்னே மகனை கடித்து தின்ற சிறுத்தை- வீடியோ

    டேராடூன்: உத்ரகாண்டில் சிறுவனை சிறுத்தை கொன்றதையடுத்து கிராம மக்கள் காட்டிற்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது.

    தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதும் பொதுமக்களை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது.

    சிறுவனை கொன்ற சிறுத்தை

    சிறுவனை கொன்ற சிறுத்தை

    இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹாரினாகாரி பகுதியில் காட்டையொட்டிய கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று 7 வயது சிறுவனை கொன்று தின்று உள்ளது.

    சிறுவனின் அலறல் சத்தம்

    சிறுவனின் அலறல் சத்தம்

    நேற்று இரவு சிறுவன் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற போது அவனை சிறுத்தை தாக்கியதாக தெரிகிறது. சிறுவனுடைய அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து அவனது தாயார் ஓடிவந்துள்ளார்.

    காப்பாற்ற முயற்சி

    காப்பாற்ற முயற்சி

    அப்போது சிறுத்தை சிறுவனை கடித்து உண்பதை பார்த்து கதறிய அவர், சிறுவனை காப்பாற்ற முயன்றார். கிராம மக்களும் ஓடி வந்து சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர்.

    பாதி சடலம் மீட்பு

    பாதி சடலம் மீட்பு

    ஆனால் அதற்குள் சிறுத்தை சிறுவனை இழுத்துக் கொண்டு ஓடி உள்ளது. சிறிது தொலைவில் சிறுவனுடைய பாதி சடலம் மட்டும் காட்டுப்பகுதியில் கிடைத்து உள்ளது.

    காட்டிற்கு தீ

    காட்டிற்கு தீ

    இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள காட்டிற்கு தீ வைத்து உள்ளனர். இதனால் காட்டுப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது.

     இரண்டாவது சிறுவன்

    இரண்டாவது சிறுவன்

    ஏற்கனவே இப்பகுதியில் மார்ச் மாதம் 4 வயது சிறுவனை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. இது இரண்டாவது சம்பவமாகும். சிறுத்தையை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    English summary
    Villagers keeps fire for the forest after a leopard kills 7 years old boy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X