For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதலை கண்ணீர்.. முதலை கண்ணீர்னு சொல்வோமே.. அந்த முதலைக்கே கண்ணீர் வடித்த கிராம மக்கள்

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் இறந்த ஒரு முதலைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி இறுதி சடங்குகளையும் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

சத்தீஸ்கர் மாநில, பெமேட்ரா மாவட்டத்தில் உள்ளது பவமோக்த்ரா கிராமம். இங்கு உள்ள குளத்தில் முதலை ஒன்று வசித்து வந்தது. சுமார் 3 மீட்டர் நீளம் கொண்ட இந்த முதலை கடந்த 130 ஆண்டுகளாக அந்த குளத்தில் வசித்து வந்தது.

நண்பன்

நண்பன்

சிறுவர்கள் குளத்தில் குளிக்கும் போது கூட அந்த முதலை எந்த தொந்தரவையும் செய்யாமல் இருந்தது. அதனால் அந்த கிராமத்தினர் அதை நண்பனாகவே பாவித்து வந்தனர்.

 பரிசோதனை

பரிசோதனை

இந்நிலையில் திடீரென அந்த முதலை குளத்தில் இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதலைக்கு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரதேச பரிசோதனை நடைபெற்றது. அப்போது முதலை வயது மூப்பு காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடக்கம்

அடக்கம்

இதையடுத்து அந்த முதலைக்கு இறுதி சடங்கு செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி டிராக்டர் உதவியுடன் இறுதி ஊர்வலமாக முதலை கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மனிதர்களுக்கு செய்ததை..

இந்த சடங்கில் 500 பேர் கலந்து கொண்டனர். அப்போது மக்கள் கண்ணீர் சிந்தினர். மனிதர்கள் இறந்தால் என்னென்ன இறுதிச் சடங்குகள் செய்வரோ அத்தனையையும் இவர்கள் செய்தனர்.

English summary
Chhattisgarh: Villagers mourn the death of a crocodile, named ‘'Gangaram' at the funeral ceremony in Bawa Mohtara village in Bemetara district. The crocodile was around 130-year-old.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X