வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை.. ரயில் சேவை பாதிப்பு! மேற்கு வங்கத்தில் டென்ஷன்
கொல்கத்தா: வக்பு சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக முர்ஷிதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவியது. போலீசார் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன.
வக்பு வாரிய திருத்த சட்டம் நாடளுமான்றத்தில் நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நீடித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிமிதிதா மற்றும் சுதி ஆகிய இரண்டு இடங்களில் நேற்று நடைபெற்ற போரட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நிமிதிதா ரயில் நிலையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
ரயில் போக்குவரத்தை முடக்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். இந்த போராட்டத்தினால் ரயில்வே சொத்துக்களும் சேதம் அடைந்தன. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களும் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் சிலர் காயம் அடைந்தனர். பதற்றத்தை தணிக்க எல்லை பாதுகாப்பு படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தற்போதைய நிலவரப்படி நிலைமை பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், டைமண்ட் ஹர்பர் பகுதியில் சாலையை மறித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக போலீசார் 10 பேர் காயம் அடைந்தனர்.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications