For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புரட்டாசி மாதம்.. திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் கட்.. தேவஸ்தானம் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரத்தில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

புரட்டாசி மாதம் பொதுவாக பெருமாள் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் இந்துக்கள் விரதமிருந்து சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவார்கள்.

இந்த மாதத்தில்தான் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி திருப்பதியில் தற்போது பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது.

விஐபி தரிசனம் ரத்து

விஐபி தரிசனம் ரத்து

இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரத்தில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் விஐபி தரிசனத்தை ரத்து செய்துள்ளது.

இன்று முதல்..

இன்று முதல்..

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் வழங்கக்கூடிய விஐபி தரிசனத்தை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று, நாளை 28, 29 , 30 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 9 நாட்களிலும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக வந்தால் மட்டுமே

நேரடியாக வந்தால் மட்டுமே

அதன்படி அரசாங்க ரீதியிலான பதவியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் நேரடியாக வந்தால் மட்டுமே விஐபி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும்என்றும், மற்ற எந்த வித சிபாரிசு கடிதங்களின் மூலம் விஐபி தரிசனம் வழங்க முடியாது என தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

English summary
VIP Dharshan has been canceled for 3days in a week at Thirupati temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X