For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போட்டி போட்டு செல்பி எடுத்த ரசிகர்கள்.. விராட் கோஹ்லியின் ‘காது‘ உடைந்தது!

ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்ததால் விராட் கோஹ்லியின் மெழுகு சிலை காது பகுதி உடைந்தது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோஹ்லியின் மெழுகு சிலை -வீடியோ

    டெல்லி: ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்ததால் விராட் கோஹ்லியின் மெழுகு சிலை காது பகுதி உடைந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான விராட் கோஹ்லிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் மெழுகு சிலை டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நேற்று வைக்கப்பட்டது .

    துசாட்ஸ் அருங்காட்சியகம்

    துசாட்ஸ் அருங்காட்சியகம்

    டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

    விராட் கோஹ்லிக்கு சிலை

    விராட் கோஹ்லிக்கு சிலை

    இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது. ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

    கோஹ்லியை போல

    கோஹ்லியை போல

    அந்த வரிசையில் தற்போது விராட் கோஹ்லியின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை விராட் கோஹ்லியை போலவே தத்ரூபமாக உள்ளது.

    போட்டி போட்டு செல்பி

    போட்டி போட்டு செல்பி

    பார்ப்பதற்கு அச்சு அசலாக ரியல் கோஹ்லியை போலவே இருப்பதால் இந்த சிலையை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். அதன் முன் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்தனர்.

    சிலையின் காது உடைந்தது

    சிலையின் காது உடைந்தது

    ரசிகர்களின் இந்த செயலால் வீராட் கோஹ்லியின் மெழுகு சிலையின் வலதுபக்க காது உடைந்து உள்ளது. உடனடியாக அதிகாரிகள் சிலையை அகற்றி, பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பி வைத்தனர்.

    English summary
    Virat Kohli's wax statue ear damaged in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X