For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கரசேவக்' போல மாறிய வீரேந்திர சேவக்... ரசிகர்கள் அதிர்ச்சி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மாட்டிறைச்சி தடைக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவக் களமிறங்கியுள்ளார். இது தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநில கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரேந்திரசேவக் கடந்த சில மாதங்களாக டிவிட்டரில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், டிவிட் செய்து வருகிறார்.

இந்த நிலையில், மாட்டிறைச்சி தொடர்பாகவும் கருத்து கூறியுள்ளார் வீரேந்திர சேவாக். ஆனால் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக நாட்டின் பெரும்பான்மை மக்கள் போராடி வரும் நிலையில், அதை அமுக்கும் வகையில் உள்ளது அவரது டிவிட்.

சேவக் டிவிட்

இலங்கையில் பசு வதைக்கு எதிராக போராடிய ஒரு புத்த பிட்சு முன்னிலையில் பசு ஒன்று மண்டியிடுவதை போல போட்டோவை பகிர்ந்துள்ளார் சேவாக். அதில் பசு மாடுதான் நமது தாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பசுவின் நன்றியுணர்வு, அபாரமாக உள்ளது என சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு யாருக்கு

ஆதரவு யாருக்கு

பசுவை உயர்த்தி பிடித்து டிவிட் போட்டுள்ளதன் மூலம், தனது ஆதரவு எந்த தரப்புக்கு உள்ளது என்பதை சேவக் காட்டிவிட்டார். இதனால் இவர் வீரேந்திர சேவக்கா அல்லது கர சேவகரா என்று விமர்சனம் செய்கிறார்கள் சமூகவலைத்தள மக்கள்.

பதிலடி டிவிட்டுகள்

சிலர் நாய் கூட இப்படி நன்றியுணர்வோடு இருக்கும், அதற்காக அதையும் புனிதம் என கூறிவிட முடியாது என கூறி, சிலர் பதிலுக்கு டிவிட் வெளியிட்டு வருகிறார்கள். மோகன்லால் நாயுடன் உள்ள படத்தை பின்னூட்டத்தில் பார்க்க முடிகிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி

சேவாக்கின் டிவிட் வலதுசாரி எண்ணங்களோடு ஒத்துப்போவதால் தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநில ரசிகர்கள் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கள் அபிமான கிரிக்கெட்டர் என்பதால் கொஞ்சம் சாஃப்ட்டாக அவருக்கு பின்னூட்டம் இட்டு வருவது கவனிக்கத்தக்கது.

English summary
Cricketer Virender Sehwag supports slaughter ban and tweeted with cow photo which trigger netizens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X