For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசா மறுப்பு.. 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிஸாவை விட்டு வெளியேறிய ஸ்பெயின் நாட்டு சமூக சேவகி

Google Oneindia Tamil News

புவனேஸ்வரம்: விசாவை புதுப்பிக்கும் மனு நிராகரித்ததால் 86 வயது ஸ்பெயின் நாட்டு கன்னியாஸ்திரி ஒருவர் ஒடிஸாவை விட்டு வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் எனிடினா (86). இவர் கன்னியாஸ்திரியாகி ஒடிஸா கிராமத்துக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். கஜபதி மாவட்டத்தில் உள்ள அலிகண்டா கிராமத்தில் உள்ள மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான சேவைகளை அவர் செய்து வந்தார்.

தலைவர்களுக்கு செய்வினையா.. அலறும் பெண் எம்பி.. எரிச்சலில் பாஜக தலைவர்கள் தலைவர்களுக்கு செய்வினையா.. அலறும் பெண் எம்பி.. எரிச்சலில் பாஜக தலைவர்கள்

ஸ்பெயின் சென்ற மூதாட்டி

ஸ்பெயின் சென்ற மூதாட்டி

இவர் விசாவை புதுப்பிக்க அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் 10 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என கடந்த 11-ஆம் தேதி அறிவுறுத்தப்பட்டார். இதையடுத்து டெல்லியிலிருந்து ஸ்பெயினுக்கு கடந்த 20-ஆம் தேதி எனிடினா சென்றுவிட்டார்.

உதவ வேண்டும்

உதவ வேண்டும்

இதனால் அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மீண்டும் அவரை அலிகண்டா கிராமத்தில் தங்க வைக்க அரசு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

5 ஆண்டுகள் சேவை

5 ஆண்டுகள் சேவை

எனிடினா, மாட்ரிட் கேபிட்டல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுவிட்டு 1966-ஆம் ஆண்டு பெர்ஹாம்பூருக்கு வந்தார். அவர் அங்கு தங்கி 5 ஆண்டுகளாக சமூக சேவை செய்து வந்தார்.

சேவை

சேவை

இதையடுத்து அவர் கடந்த 1971-ஆம் ஆண்டு அலிகண்டாவில் கிளினீக்கை தொடங்கி அங்குள்ள மக்களுக்கு சேவை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
86 years old Spanish Nun returned to her country after government rejects to renewal her visa. She leaves from a village from Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X