For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்போசிஸ் விஷால் சிக்கா இணையப்போகும் புது நிறுவனம் எது தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த வெள்ளிக்கிழமை, விஷால் சிக்கா இன்போசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை துறந்தார். நிர்வாக துணை தலைவராக பதவியில் தொடர்ந்த அவர் அதையும் நேற்று துறந்தார்

ஆனால் சிக்காவிற்கு எதிர்காலம் வெளிச்சமாக உள்ளது. அவர் 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஹெவ்லெட் பேக்கர்டு எண்டர்பிரைஸ் (HPE) என்ற ஐடி நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) இணைகிறாராம்.

Vishal Sikka likely to join the Hewlett Packard Enterprise

இது ஒரு அமெரிக்க நிறுவனம். 2015 ஆம் ஆண்டில் Hewlett-Packard இல் இருந்து பிரிந்தபோது ஹெச்பிஇ உருவாக்கப்பட்டது. சுமார் இரண்டு லட்சம் ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் உள்ளனர். ஹெச்பிஇ தரவுமைய மென்பொருள் விற்பனை செய்கிறது, ஹெச்பி கணினிகள் மற்றும் பிரிண்டர்களை விற்கிறது.

2010 இல் கலிஃபோர்னிய கவர்னர் போட்டியில் குடியரசுக் கட்சி டிக்கெட்டில் தோல்வியுற்ற மெக் வைட்மேன் HPE இன் தலைவர் ஆவார். கடந்த ஆண்டு, ஹெச்பிஇ நிறுவன CTO பதவியிலிருந்து மார்ட்டின் ஃபிங்க், விலகினார். அந்த பதவிக்கு சிக்கா பணியமர்த்தப்படுகிறார்.

கடந்த வாரம் சிக்கா அளித்த பேட்டியொன்றில், தனது குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருவதாக கூறியிருந்தார். ஆனால் ஹெச்பிஇ நிறுவனத்தில் பணிக்கு சேருவது குறித்து அவர் இதுவரை வெளிப்படையாக கருத்து கூறவில்லை.

English summary
Vishal Sikka former CEO and managing director of Infosys is most likely to join the Hewlett Packard Enterprise (HPE) IT company as chief technology officer (CTO).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X