For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்போசிஸ் மேலாண் இயக்குநர், தலைமை செயல் இயக்குநர் பதவிகளில் இருந்து விஷால் சிக்கா ராஜினாமா!

இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனர் பதவிகளை விஷால் சிக்கா ராஜினாமா செய்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனர் பதவிகளை விஷால் சிக்கா ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு புதிய தலைவர் மற்றும் இயக்குனராக யூ.பி.பிரவின் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக பொருளாதார சூழல், கார்பரேட் நிறுவனங்களுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இன்போசிஸ் நிறுவனம் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருகின்றனர். இன்போசிஸ் நிறுவனத்தின் சர்வதேச தலைவராக இருந்த அனிர்பன் தேய், எம்.ஜி.,யாக இருந்த யூசுப் பஷீர், துணைத் தலைவராக இருந்த ரிதிகா சூரி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது விஷால் சிக்காவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐடி நிறுவனங்களில் முன்னணியான இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து தனது உயர் பதவிகளை ராஜினாமா செய்வதாக விஷால் சிக்கா கடிதம் எழுதியுள்ளார். அதில் இன்போசிஸ் குழு உறுப்பினர்கள் தன் மீது வைக்கும் தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களும் ராஜினாமா செய்வதற்கான காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

 தனிப்பட்ட தாக்குதல்கள்

தனிப்பட்ட தாக்குதல்கள்

"கடந்த சில மாதங்களாக என்னுடைய செயல்பாடுகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகிறது, தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது, இதனால் என்னால் சுதந்திரமாக செயல்பட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக செயல்பட முடியவில்லை" என்று சிக்கா தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

சிக்காவின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவரது ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்பதாக இன்போசிஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதே போன்று நிர்வாகக் குழும உறுப்பினர்கள் இது போன்று மொட்டைக்கடுதாசி அனுப்பும் சம்பவங்கள் கடநத் சில மாதங்களாக அதிகரித்து வருவது அதிகரித்துள்ளது வருத்தமளிப்பதாக கூறியுள்ளது.

 வருத்தம்

வருத்தம்

இதற்கு முன்னர் இன்போசிஸ் அளித்திருந்த தகவலில், இது போன்ற அவதூறு கடிதங்கள் அனுப்பப்படுவது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பலனில்லை என்றும் தவறான செயல்களால் நிறுவனத்தின் மதிப்புமிக்க சிஇஓவை இழந்துவிட்டதாகவும் இன்போசிஸ் கூறியுள்ளது. எனினும் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக நீடிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 பங்குகள் வீழ்ச்சி

பங்குகள் வீழ்ச்சி

மேலும் நிறுவனத்தின் சிஓஓ பிரவீன் ராவோ வை இடைக்கால மேலாண் இயக்குனர் மற்றும் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். விகாஷ் சிக்காவின் திடீர் ராஜினாமா அறிவிப்பால் இந்த நிறுவனப் பங்குகள் 5 சதவீத வீழ்ச்சியடைந்தன. நிரந்தர சிஇஓ மற்றும் மேலாண் இயக்குனர்நியமிக்கப்பட்டு பொறுப்பேற்கும் வரை விகாஷ் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது, அதாவது மார்ச் 31,2018 வரை அவர் இந்த நிறுவனத்தில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

 இந்திய அமெரிக்கர்

இந்திய அமெரிக்கர்

இந்திய அமெரிக்கரான விகாஷ் சிக்கா 2014ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதற்கு முன்னர் சாப் நிறுவனத்தில் மொபைல், அனலட்டிக்ஸ், மற்றும் க்லவுட் கம்ப்யூட்டிங் பிரிவுகளில் முக்கிய மாற்றங்களுக்கு காரணமானவராக விஷால் சிக்கா என்பது குறிப்பிடத்தக்கது

English summary
Vishal Sikka has resigned as managing director and chief executive officer of Infosys.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X