For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்வை குறைபாடு உடையவர்களும் இனி ரூபாயை கண்டுபிடிக்கலாம்.. ஆர்.பி.ஐ வெளியிட போகும் ஆப்!

விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

உலகில் சில நாட்டு ரூபாய்களில் மட்டுமே பிரெய்லி முறை இருக்கிறது. அதாவது விழிமாற்று திறனாளிகளும் எளிதாக ரூபாய் நோட்டை அடையாளம் காணும் வகையில் அதில் சில அச்சுகள் இருக்கும்.

அந்த அடையாளங்களை வைத்து நோட்டுகளை அடையாளம் காண முடியும். இந்திய பணத்திலும் இந்த பிரெய்லி முறை இருக்கிறது.

[ இதுதான் திமுகவின் மாஸ்டர் பிளானா? கருணாஸ் அதிரடியின் பின்னணி ]

கடினமாக இருக்கிறது

கடினமாக இருக்கிறது

டிமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு நீக்கம் எல்லா மக்களையும் எப்படி பாதித்ததோ அதேபோல் விழிமாற்று திறனாளிகளையும் பாதித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டை அடையாளம் காண முடியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள். புதிய ரூபாய் நோட்டில் எது இரண்டாயிரம், எது ஐந்நூறு என்று தெரியாமல் குழம்பி வருகிறார்கள்.

உருவாக்க போகிறது

உருவாக்க போகிறது

இந்த நிலையில்தான் விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஒரு ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை இதற்காக வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. இதை உருவாக்கும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுப்பட்டு வருகிறது.

தனியார் ஆப் நிறுவனம்

தனியார் ஆப் நிறுவனம்

இதற்காக தனியார் அமைப்பு ஒன்றின் ஆதரவை நாடி இருக்கிறது. அந்த அமைப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. ஆனால் அந்த அமைப்பு ஆண்ட்ராய்ட் உலகில் ஏற்கனவே நிறைய ஆப்களை வெளியிட்டு இருப்பதாகவும், இது புதிய ஆப் ஒன்றை எளிதாக உருவாக்கி கொடுக்கும் என்றும் கூறியுள்ளது.

மிக சரியாக சொல்லும்

மிக சரியாக சொல்லும்

இந்த ஆப் மொபைலில் இருக்கும் சென்சார்கள் மூலம் இயங்க கூடியது. மொபைலின் கேமராவில் ரூபாயை காட்டினால் அதுவே அதை ஸ்கேன் செய்து என்ன ரூபாய் என்று கண்டுபிடிக்கும். அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கும். பின் ஸ்பீக்கர் மூலமாக அதை தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
Visually challenged people can identify new notes easily: RBI looking to develop an APP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X