For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் 2020: நேரடி வரி வழக்குகள் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: நேரடி வரி செலுத்துவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் விவாத் சே விஸ்வாஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

நேரடி வரி செலுத்துவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் (சர்ச்சை இல்லை; நம்பிக்கை) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வரி செலுத்துவோரின் மேல் முறையீட்டு வழக்குகள் எந்த மட்டத்தில் நிலுவையில் இருந்தாலும் அவர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

Vivad Se Vishwas scheme to reduce litigations in direct taxes: Nirmala Sitharaman

இத்தி்ட்டத்தின்கீழ், வரி செலுத்துவோர் தாம் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை 31 மார்ச் 2020க்குள் செலுத்தி விட்டால் வட்டி மற்றும் அபராதத் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 31 மார்ச் 2020க்கு பிறகு இத்திட்டத்தின் கீழ் பயனைடைய விரும்புவோர் சற்று கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

இத்திட்டம் 2020 ஜூன் 30 வரை நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், வரி செலுத்துவோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள்.

உச்சநீதிமன்றம் உட்பட பல்வேறு மேல் முறையீட்டு அமைப்புகளிலும், நேரடி வரி தொடர்பான 4 லட்சத்து 83 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி திட்டம், நதிகள் இணைப்பு, வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லையே.. விஜயகாந்த்பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி திட்டம், நதிகள் இணைப்பு, வேலைவாய்ப்பு திட்டங்கள் இல்லையே.. விஜயகாந்த்

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சப்கா விகாஸ் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 89 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அரசால் ஏற்படுத்தப்படும் சீர்திருத்த நடவடிக்கைளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தலையீடுகளை ஒழிக்கவும், வருமானவரி சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

English summary
The Union Budget has proposed Vivad Se Vishwas Scheme which aims at reducing litigations in the direct taxes payments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X