For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத்துக்கு இணையாக விசாகப்பட்டினத்தை முன்னேற்றுவேன்: சந்திரபாபு நாயுடு

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்துக்கு இணையாக விசாகப்பட்டினத்தை முன்னேற்றப்போவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அனகாபள்ளியில் இருந்து நாக்பள்ளி முதல் சுமார் 12 இடங்களுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை அவர் இன்று துவங்கினார்.

Vizag will be developed on par with Hyderabad, says Andhra CM Naidu

சுற்றுப்பயணத்தை துவங்கும் முன்பு அவர் அனகாபள்ளியில் உள்ள நூகாலம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் மக்களை சந்தித்து கடன் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்து பேசுகிறார்.

மேலும் அவர் அனகாபள்ளியில் வைத்து விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களை சந்தித்து பேசுகிறார். மேலும் மாவட்ட அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்நிலையில் ஹைதராபாத்துக்கு இணையாக விசாகப்பட்டினத்தை முன்னேற்றப் போவாதக நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை பிரித்தபோது ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு கிடைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Andhra Pradesh Chief Minster N Chandrababu Naidu on Friday said that Vizag, the largest city in the truncated state, will be developed on the lines of Hyderabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X