• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

4வது கட்ட லோக்சபா தேர்தல்.. 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு.. 54% வாக்குகள் பதிவு!

|
    Lok Sabha Election 2019: இன்று 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு- வீடியோ

    டெல்லி: இன்று நாடு முழுக்க 4ம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்றது. 4வது கட்ட லோக்சபா தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மொத்தம் 71 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 54% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 4 கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்று 4வது கட்ட தேர்தல் 71 தொகுதிகளுக்கு நடைபெற்றது. காலை 7 மணிக்கு இத்தொகுதிகளில் வாக்குப் பதிவு துவங்கியது.

    Voting begins for 4th phase of Lok Sabha elections

    மகாராஷ்டிராவில் 17 தொகுதிகள், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள் மற்றும் ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

    மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெற்றது. ஆக மொத்தம் 9 மாநிலங்களுக்கு உட்பட்ட 71 தொகுதிகள் தேர்தலை சந்தித்தது. பெரும்பாலும் ஹிந்தி பேசும் மாநிலங்களாகும்.

    இதேபோல, ஒடிசா சட்டசபை தேர்தலில் எஞ்சிய 41 தொகுதிகளுக்கும் இன்றே தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    9 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவிகிதம் பின்வருமாறு:

    • ஒடிசாவில் 6 மணி வரை 64.05% வாக்குகள் பதிவாகி உள்ளது.
    • ராஜஸ்தானில் 6 மணி வரை 62.86% வாக்குகள் பதிவாகி உள்ளது.
    • மத்திய பிரதேசத்தில் 6 மணி வரை 65.86% வாக்குகள் பதிவாகி உள்ளது.
    • காஷ்மீரில் 6 மணி வரை 9.8% வாக்குகள் பதிவாகி உள்ளது.
    • ஜார்கண்டில் 6 மணி வரை 63.40% வாக்குகள் பதிவாகி உள்ளது.
    • பீகாரில் 6 மணி வரை 53.67% வாக்குகள் பதிவாகி உள்ளது.
    • மேற்கு வங்கத்தில் 6 மணி வரை 76.47% வாக்குகள் பதிவாகி உள்ளது.
    • மகாராஷ்டிராவில் 6 மணி வரை 51.06% வாக்குகள் பதிவாகி உள்ளது.
    • உத்தர பிரதேசத்தில் 6 மணி வரை 53.12% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Voting begins for fourth phase of Lok Sabha elections on Monday. voting held for 17 Parliamentary seats in Maharashtra, 13 each in Rajasthan and Uttar Pradesh, 8 in West Bengal; six each in Madhya Pradesh and Odisha; five in Bihar; and three in Jharkhand in this phase.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more