For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றினால் மட்டுமே அரசு வேலை: அதிர வைக்கும் தகவல்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: அரசு வேலையில் சேர 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்திய ராணுவத்தில் 7 ஆயிரம் அதிகாரிகள், சுமார் 20 ஆயிரம் வீரர்கள் பற்றாக்குறை உள்ளது என்று நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது. இந்திய விமானப்படையில் 150 அதிகாரிகள், சுமார் 15 ஆயிரம் வீரர்கள், கடற்படையில் 150 அதிகாரிகள், 15 ஆயிரம் வீரர்கள் பற்றாக்குறையாக உள்ளது.

Wanna govt. job?: Read this first

இந்த பற்றாக்குறையை தீர்க்க நாடாளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரை செய்துள்ளது. அதாவது அரசு வேலையில் சேர விரும்புவோர் 5 ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் ராணுவத்தில் ஏற்படும் ஆட்கள் பற்றாக்குறையை தீர்க்க முடியும் என்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு. அரசு ஊழியர்களுக்கான திட்டங்களை வகுக்கும் மத்திய பயிற்சி அமைப்புகள் இந்த பணியை கவனிக்கலாம் என்று அந்த குழு தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே துறையில் மத்திய அரசு சார்பில் மட்டும் 30 லட்சம் பேரும், மாநில அரசுகள் சார்பில் 2 கோடி பேரும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Parliamentary Standing Committee has recommended that those who want to get government job should serve in military for five years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X