For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாலி கட்டும் நேரத்தில் வினோத நிபந்தனை விதித்த மணப்பெண்: அப்படி என்ன நிபந்தனை?

By Siva
Google Oneindia Tamil News

சன்டிகர்: ஹரியானாவில் மணப்பெண் ஒருவர் தனது கழுத்தில் தாலி ஏறும் முன்பு மணமகனுக்கு விதித்த நிபந்தனையை நினைத்து நினைத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள பிலாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பூனம். அவரது தந்தை ஒரு ஆசிரியர். உள்ளூரில் உள்ள அரசு கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்ற பூனம் டியூஷன் எடுத்து வருகிறார்.

Want to tie the knot? You should learn from this bride

இந்நிலையில் பூனமுக்கும் கஜ்ஜார் கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் குமாருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை திருமணத்தன்று பூனம் தனது கழுத்தில் தாலி ஏறும் முன்பு குமாருக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.

அதாவது 11 சிறுமிகளை குமார் படிக்க வைக்க வேண்டும் என்று பூனம் கூறினார். பூனத்தின் நிபந்தனையை குமார் ஏற்றுக் கொண்டு அவருக்கு தாலி கட்டினார். பூனத்தின் இந்த நிபந்தனை குறித்து அறிந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஹரியானா மாநிலத்தில் கல்வியறிவு படைத்தவர்கள் மிகவும் குறைவு. மேலும் அம்மாநிலத்தில் வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Haryana based bride's condition to her groom on the day of the wedding has made headlines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X