For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோலார் மோசடி: சரிதா நாயருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்

By Karthikeyan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான தொழில் அதிபர் சரிதா நாயர் பல முறை விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார் நீதிபதி சிவராஜன்.

கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை கமிஷன் முன் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜி ராதாகிருஷ்ணன் ஆதியோர் ஆஜாராகி வாக்குமுலம் அளித்து வருகின்றனர்.

Warrant issued against Saritha Nair

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரிதா நாயர் கோர்ட்டில் ஆஜாரான போது முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை அமைச்சர் ஆர்யடன் முகமதுவுக்கு ரூ.40 லஞ்சமும் கொடுத்ததாக கூறியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதையடுத்து கடந்த மாதம் இந்த கமிஷன் முன்பு ஆஜராகி உம்மன்சாண்டி வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் சமீப காலங்களாக பலமுறை சரிதா நாயர் கமிஷன் முன் சரிவர ஆஜராகவிலை என கூறப்படுகிறது. விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் சரிதாவின் மனு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

நேற்று கண்டிப்பாக சரிதா நாயர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி எச்சரித்திருந்தார். எனினும் சரிதா அதை பொருட்படுத்தாமல் விசாரணைக்கு ஆஜராக வில்லை. இதனையடுத்து சரிதாவுக்கு நீதிபதி சிவராஜன் கமிஷன் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இம்மாதம் 26ஆம் தேதிக்குள் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜர்படுத்துமாறு அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

English summary
Solar Scam Enquiry Commission on Thursday issued a non-bailable arrest warrant against solar scam prime accused Saritha S Nair for not appearing before it for depositions despite repeated directives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X