For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாஜ் மஹால் சிவன் கோவிலாக இருந்தது, அது இந்துக்களுக்கே சொந்தம்: வக்கீல்கள் வழக்கு

By Siva
Google Oneindia Tamil News

ஆக்ரா: காதல் சின்னமான தாஜ் மஹால் சிவன் கோவிலாக இருந்தது என்று ஆக்ராவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 6 வழக்கறிஞர்கள் சேர்ந்து நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

Was Taj Mahal originally a Shiva temple? Agra lawyers claim

ஆக்ராவில் இருக்கும் தாஜ் மஹால் ஒரு காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது. அதனால் தாஜ் மஹாலின் உரிமையை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும். முஸ்லீம்கள் அங்கு பிரார்த்தனை செய்ய தடை விதிக்க வேண்டும். தாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. அந்த கோவிலில் அக்ரேஷ்வர் மகாதேவ் குடியிருந்தார் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கலாச்சாரத்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

தாஜ் மஹால் சிவன் கோவிலாக இருந்தது இல்லை என்று அகழ்வாராய்ச்சி துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் அக்ரேஷ்வர் மகாதேவையும் வாதியாக அந்த வழக்கறிர்கள் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Six lawyers from Agra have filed a case claiming that Taj Mahal was originally a Shiva Temple and it's ownership to be transferred to Hindus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X