For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைரல் வீடியோ.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. கனநிமிடத்தில் தப்பிய இருவர்!

Google Oneindia Tamil News

பெல்காம் : வட கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்று வெள்ளத்தில ஒரு கார் அடித்துச்செல்லப்பட்டது. காரில் இருந்த இருவரை உள்ளூர் மக்கள் காப்பாற்றினார்.

கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் கனமழை பெய்தது. கிருஷ்ணா நதி மற்றும் அதன் துணை நதிகளான பீமா, கட்டபிரபா, மலபிரபா, மற்றும் துங்கபத்ரா ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் ஆந்திராவின் கடப்பாவிலிருந்து கர்நாடகாவின் பிஜாப்பூர் நோக்கிச் சென்ற காரில் இன்று இரண்டு பேர் பயணம் செய்தனர் . அவர்கள் செல்லும் வழியில் அனந்தபூர் மாவட்டம் ராஜபுரம் அருகே ஒரு கால்வாயில் வெள்ளம் பாய்ந்தோடியது. பாலத்திற்கு மேல் வெள்ளம் வேகமாக சென்றது. காலை 8.40 மணி அளவில் கூட்டி குண்டல் இடையே அருகே அரசு பேருந்து ஒன்று சென்றது. அப்போது கால்வாய் வெள்ளத்திதை பேருந்து வேகமாக கடந்து சென்றது.

20.5 செமீ மழை பெய்யும்.. 50 கிமீ வேகத்திற்கு காற்று வீசும்.. கேரளா இடுக்கிக்கு ரெட் அலர்ட்.. கனமழை!20.5 செமீ மழை பெய்யும்.. 50 கிமீ வேகத்திற்கு காற்று வீசும்.. கேரளா இடுக்கிக்கு ரெட் அலர்ட்.. கனமழை!

அடித்துச்செல்லப்பட்டது

அடித்துச்செல்லப்பட்டது

பின்னாலேயே காரும் சென்றது. காரில் ராகேஷ் 30வயது மற்றும் யூசுப் என்ற இரண்டு பேர் பயணம் செய்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு முன்பு வந்த பேருந்து வெள்ளத்தை கடந்துவிட்டது. காரால் வெள்ளத்தை எதிர்த்து வர முடியவில்லை. வெள்ளத்தில் சிக்கி வர முடியாமல் தத்தளித்தது. கார் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டது. காரில் இருந்த ராகேஷ் மற்றும் யூசப் உள்ளிட்ட 2 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர்.

2 பேர் தப்பினர்

2 பேர் தப்பினர்

ஆனால் நல்ல வேளையாக 100 மீட்டருக்கு பிறகு ஆற்றில் நீர் மட்டம் ஆழமில்லாமல் இருந்ததால் உள்ளூர் மக்கள் உதவியுடன் காப்பாற்றப்பட்டனர். இதனிடையே கார் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை சுற்றியிருந்த பலரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியா சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

3 மாநிலங்களில்

3 மாநிலங்களில்

அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய இரு கடல்களிலும் பருவ மழைக்கான புயல் சின்னங்கள் உருவாகி வருகின்றன. இதனால் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) அடுத்த மூன்று நாட்களுக்கு கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது.

மழை மேகங்கள்

செயற்கைக்கோள் படங்களின் படி ( புதன்கிழமை நிலவரப்படி) சென்னை, திருப்பதி, பெங்களூரு, வேலூர், மைசூரு, சேலம், புதுச்சேரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊரகளிலும் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் மழை பெய்யும் மேகங்கள் பரவி இருந்தன.

English summary
Heavy rains in north karnataka is leading to over flowing streams. A car with two people was washed away as they tried to follow a bus. Locals managed to save them. Incident from gutti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X