For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட சும்மா வாங்கப்பா.. சித்தராமையா-எடப்பாடி பழனிச்சாமியை ஹேண்ட்ஷேக் கொடுக்க வைத்த உமா பாரதி 'டீச்சர்'

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி நீர் பிரச்சினையில் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் இருமாநில அரசு அதிகாரிகளும் பங்கேற்று சுமூகத்தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தமிழக-கர்நாடக அரசு அதிகாரிகள் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தது. டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் ஷ்ராம் சக்தி பவனில் தொடங்கியுள்ளது.

மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் கூட்டம் தொடங்கியது. அப்போது, உமா பாரதியின் வலது பக்கம் சித்தராமையாவும், இடதுபக்கம் எடப்பாடி பழனிச்சாமியும், நின்று கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

எதிர்பார்க்காத நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமியின் கையையும், சித்தராமையா கையையும் பிடித்துக் கொண்ட உமா பாரதி, இருவர் கைகளையும் வலுக்கட்டாயமாக சேர்த்து வைத்தார். பள்ளிக்கூடங்களில் சண்டை போட்டுக்கொள்ளும், மாணவர்களை ஆசிரியை அழைத்து வந்து, ஹேன்ட் ஷேக் கொடுங்கள் என்று அன்பு கட்டளையிடுவதை போல இருந்தது உமா பாரதி செயல்.

திடீரென இவ்வாறு கர்நாடக முதல்வருடன் கை கொடுக்க வேண்டிய நிலை வந்ததால் எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சம் அப்செட்டாகவே இருந்தார். அவரது முகபாவனையில் அது தெரிந்தது. அதேநேரம் சித்தராமையா சிரித்தபடி இருந்தார். எனவே, பழனிச்சாமி சற்று சுதாரித்துக்கொண்டு லைட் ஸ்மைல் கொடுத்தார். இதன்பிறகு, சித்தராமையாவும், எடப்பாடி பழனிச்சாமியும், ஒருவரை ஒருவர் பார்த்து கும்பிட்டபடி தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். நடுவேயிருந்த இருக்கையில் உமா பாரதி அமர்ந்தார்.

என்னதான் கை கொடுத்துக்கொண்டாலும், இரு மாநிலங்களுமே தங்களது நிலைப்பாட்டில் நிலையாகத்தான் இருப்பார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

English summary
Water Resources Minister Uma Bharti chairs meeting over Cauvery Issue , Karnataka CM Siddaramaiah & a rep of TN CM attend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X