For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடுத்து வச்சவங்கப்பா.. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எம்எல்ஏ செய்த காரியம்.. நெகிழும் மக்கள்

Google Oneindia Tamil News

வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா எம்எல்ஏ சசீந்திரன் புத்துமலாவில் தொடர்ந்து, பெய்யும் மழையை பொருட்படுத்தாமல் பணியாற்றி வருவதை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதில் வயநாடு மற்றும் மலப்புரம், கண்ணூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

wayanad kalpetta mla saseendran doing flood relief works in his constituency in heavy rain

குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்தும், வெள்ளத்தில் சிக்கியும் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினருடன் இணைந்து பொதுமக்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று காஷ்மீர்.. நாளை வடகிழக்கு மாநிலங்கள்... எச்சரிக்கும் ஓவைசி இன்று காஷ்மீர்.. நாளை வடகிழக்கு மாநிலங்கள்... எச்சரிக்கும் ஓவைசி

இந்நிலையில் வயநாடு மாவட்டம் கல்பெட்டா தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சசிந்தரன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்துமாலா மக்களுக்கு உதவிகளை செய்து வருவதுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடும் மழையையும் பொருட்படுத்தாமல் சசீநதரன் மீட்பு பணியில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அவரது புகைப்படங்களை பார்த்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும், இப்படி ஒரு எம்எல்ஏ கிடைக்க அந்த மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் சிலர் பாராட்டியுள்ளனர்.

English summary
wayanad district kalpetta mla saseendran doing flood relief works in heavy rain at puthumala area photos
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X