For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசும் பாலில் தங்கம்.. மாட்டுக்கறிக்கு பதில் நாய்க்கறி சாப்பிடுங்க..மே.வங்க பாஜக தலைவர் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    மாட்டுக்கறிக்கு பதில் நாய்க்கறி சாப்பிடுங்க... மே.வங்க பாஜக தலைவர்

    கொல்கத்தா: நாட்டு மாடுகளின் பசும்பாலில் தங்கம் இருக்கிறது; மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள் நாய்க்கறியை சாப்பிடலாமே என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.

    மேற்கு வங்கத்தின் புர்வானில் நிகழ்ச்சி ஒன்றில் திலீப் கோஷ் பேசியதாவது:

    WB BJP president Dilip Ghosh claims gold in cows milk

    படித்த சமூகத்தினர் சாலை ஓரங்களில் மாட்டுக்கறி உணவை சாப்பிடுகின்றனர். எதற்காக மாட்டுக்கறி? நாய் கறியையும் கூட சாப்பிடுங்க.. அது உடலுக்கு நல்லது.

    அதேபோல் பிற விலங்குகளின் மாமிசத்தையும் சாப்பிடுங்க.. உங்களை யார் தடுத்தது? ஆனால் அதை உங்கள் வீடுகளில் சாப்பிடுங்கள்..

    மாடு என்பது எங்களுக்கு தாய்.. பசுவதையை நாங்கள் ஒரு சமூக விரோத செயலாகவே பார்க்கிறோம். சிலர் வீடுகளில் வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார்கள்.. அதன் கழிவுகளை கூட சுத்தப்படுத்துகின்றனர். அது மிகப் பெரிய பாவம்.

    இந்தியா என்பது கிருஷ்ணரின் பூமி. அதனால் பசுவுக்கு மரியாதை அளிக்க வேண்டும். எங்களது தாய் பசுமாடுகளை கொல்வது கொடூரமான குற்றம்.

    சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க முடியாது... பினராயி திட்டவட்டம்சபரிமலையில் பெண்களுக்கு தடை விதிக்க முடியாது... பினராயி திட்டவட்டம்

    அதை நாங்கள் தொடர்ந்தும் எதிர்ப்போம். தாய்ப்பாலுக்குப் பின் குழந்தைகள் பசும்பாலை குடித்துதான் வாழ்கின்றனர். பசு எங்களது தாய்..

    எங்களது தாயை கொலை செய்வதை எந்த வகையிலும் நாங்கள் சகித்துக் கொள்ளமாட்டோம். பசும் பாலில் தங்கம் இருக்கிறது. அதனால்தான் அது ஒருவித மஞ்சள்நிறத்துடன் இருக்கிறது.

    நாட்டு பசுமாடுகள்தான் எங்கள் தாய். இறக்குமதி செய்யப்பட்ட மாடுகள் அல்ல. இவ்வாறு திலீப் கோஷ் பேசினார்.

    English summary
    West Bengal BJP president Dilip Ghosh has claimed gold in desi cow's milk.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X