For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதெல்லாம் நாங்க ஏற்கனவே சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்

டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி கொடுத்து இருக்கும் தேர்தல் வாக்குறுதியில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் பாமகவால் ஏற்கனவே வழங்கப்பட்டவை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி கொடுத்து இருக்கும் தேர்தல் வாக்குறுதியில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் பாமகவால் ஏற்கனவே வழங்கப்பட்டவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது.70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

இதற்காக ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. டெல்லியில் அனைத்து தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி தனியாக போட்டியிட உள்ளது.

முக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார் முக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார்

தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை

இந்த நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், 10 முக்கியமான வாக்குறுதிக்கு அக்கட்சி முக்கியத்துவம் அளித்துள்ளது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி உறுதி செய்யப்படும். மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.தரமான மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும். 24 மணிநேரமும் தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அடிப்படை பிரச்சனைகளுக்கு அக்கட்சி முக்கியத்துவம் கொடுத்துள்ளது .

பாமக பார்வை

ஆம் ஆத்மி கட்சியின் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் செய்துள்ள டிவிட்டில், தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான ஆம்ஆத்மி கட்சி தேர்தல்அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 10 வாக்குறுதிகளில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் பல இடம்பெற்றுள்ளது.

ஆம் ஆத்மி எப்படி

ஆம் ஆத்மி எப்படி

முக்கியமாக இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பெரும்பான்மையான வாக்குறுதிகள் பாமகவால் ஏற்கனவே வழங்கப்பட்டவை என்பதில் மகிழ்ச்சி!, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பாமகவின் வழக்கம்

பாமகவின் வழக்கம்

பொதுவாக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் பாமக பெரிய அளவில் தேர்தல் அறிக்கை வெளியிடும். முக்கியமான தொலைநோக்கு பார்வை வாக்குறுதிகள் பலவற்றை பாமக அளிப்பது வழக்கம். பாமக மிக அதிகமாக இலவச கல்வி, மதுபான தடைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
We already gave these promises says PMK Founder Ramadoss on Delhi AAP manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X