For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆலை இயங்காததால் மாதம் ரூ.1400 கோடி இழப்பு.. சொல்கிறார் ஸ்டெர்லைட் சிஇஓ

ஸ்டெர்லைட் ஆலை இயங்காததால் மாதம் ரூ.1400 கோடி இழப்பு ஏற்படுவதாக ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை இயங்காததால் மாதம் ரூ.1400 கோடி இழப்பு ஏற்படுவதாக ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கொடூரமான காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர்.

We are facing Rs.1400 Cr loss every month due to the closure of the factory says CEO of Sterlite

எதிர்ப்புகளை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் நிறுவனம் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் நேற்று பேட்டி அளித்தார்.

இந்த நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலை இயங்காத காரணத்தால் நிறைய இழப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார். இதனால் வேதாந்தா குழுமம் பெரிய நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் நிறுவனம் அரசால் மூடப்படும் முன்பே, பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மொத்தமாக மூடப்பட்டு இருப்பதால் அதிக இழப்பை சந்தித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இயங்காததால் மாதம் ரூ.1400 கோடி இழப்பு ஏற்படுவதாக ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் மொத்தம் ரூபாய் 3000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் விரைவில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார்.

English summary
We are facing Rs.1400 Cr loss every month due to the closure of the factory says CEO of Sterlite.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X