For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்கள் டெல்லிக்கோ.. பாகிஸ்தானுக்கோ கைப்பாவை கிடையாது.. பாக்கிற்கு பரூக் அப்துல்லா கடும் பதிலடி

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆறு அரசியல் கட்சிகள் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கு எதிராக கூட்டாகப் போராடுவதாக அறிவித்ததற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த தேசிய மாநாட்டு கட்சியின் (என்.சி) தலைவர் பரூக் அப்துல்லா "நாங்கள் யாருடைய கைப்பாவைகளும் இல்லை" என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

    Imran Khan-க்கு Jaishankar கொடுத்த பதில்.. அசிங்கப்பட்ட Pakistan

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அம்மாநிலத்தைச் சேர்ந்த சிய மாநாட்டு கட்சியின் (என்.சி) தலைவர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    2008 மும்பை தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளுக்கு சிறை தண்டனை விதித்த பாகிஸ்தான்! 2008 மும்பை தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளுக்கு சிறை தண்டனை விதித்த பாகிஸ்தான்!

    குப்கார் பிரகடனம்

    குப்கார் பிரகடனம்

    இந்நிலையில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் உள்பட 6 கட்சிகளின் தலைவர்கள் சமீபத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பரூக் அப்துல்லா தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஒன்றாக போராட்டம் நடத்த முடிவு செய்தனர். குப்கார் பிரகடனம் என்று அழைக்கப்படும் இந்த போராட்டத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்ர் ஷா மெகமூத் குரேஷி ஆதரவு தெரிவித்தார்.

    ஆதரவு அளித்தார்

    ஆதரவு அளித்தார்

    இதுபற்றி அவர். இந்த குப்கார் பிரகடனம் சாதாரண நிகழ்வு அல்ல. காஷ்மீரில் ஓராண்டுக்கு பின்ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் என்று கூறி, அதற்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பரூக் அப்துல்லா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    கைப்பாவை அல்ல

    கைப்பாவை அல்ல

    இதுபற்றி அவர் கூறும் போது, "ஜம்மு-காஷ்மீரின் பிரதான அரசியல் கட்சிகளை பாகிஸ்தான் எப்போதுமே துஷ்பிரயோகம் செய்துள்ளது, ஆனால் இப்போது திடீரென்று அவர்கள் எங்களை விரும்புகிறார்கள். ஆனால் நாங்கள் யாருடைய கைப்பாவைகள் அல்ல, நாங்கள் டெல்லிக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு யாருடைய கைப்பாவையும் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். நாங்கள் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக போராடுகிறோம், அவர்களுக்காக உழைப்போம்" என்று கூறினார்.

    உரிமைகள் பறிப்பு

    உரிமைகள் பறிப்பு

    எல்லை தாண்டிய தீவிரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அப்துல்லா, "தீவிரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்புவதை நிறுத்துமாறு நான் பாகிஸ்தானை கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மாநிலத்தில் நடந்த இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் போராட உறுதிபூண்டுள்ளன கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அரசியலமைப்பற்ற முறையில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டவை உட்பட எங்கள் உரிமைகள் அமைதியானவை. அதே நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் "அனைவரின் சிறந்த நலனுக்காக" மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

    மக்கள் பலி

    மக்கள் பலி

    ஒவ்வொரு முறையும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நிகழும்போது கட்டுப்பாட்டு கோட்டின் இருபுறமும் எங்கள் மக்கள் கொல்லப்படுகிறார்கள். கடவுளிடம் மன்றாடி கேட்கிறேன். அதை தயவு செய்து நிறுத்துங்கள்" இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    Farooq Abdullah Reacting sharply to Pakistan hailing the recent Gupkar Declaration. "Let me make it clear that we are not anyone's puppets, neither New Delhi's nor of anyone across the border. We are answerable to the people of Jammu and Kashmir and will work for them," he told PTI from Srinagar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X