For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்கள் ரெடி.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்!

மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் என்று அம்மாநில காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் என்று அம்மாநில காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி பொறுப்பேற்று 5 மாதங்கள்தான் ஆகிறது. மத்திய பிரதேசத்தில் சட்டசபையில் மொத்தம் 230 இடங்கள் உள்ளது. அங்குஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை.

We are ready for the floor test says MP CM Kamal Nath

தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 113 இடங்கள் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சமாஜ்வாதி 1 இடத்திலும், சுயேட்சைகள் 1 இடத்திலும் ஆதரவு அளிக்கிறார்கள். இதனால் காங்கிரஸ் கட்சி சார்பாக கமல்நாத் அங்கு முதல்வராக இருக்கிறார்.

பாஜக கட்சிக்கு அங்கு 109 இடங்கள் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக பல முறை முயன்று தோல்வியை தழுவியது. ஆனால் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அம்மாநில ஆளுநருக்கு பாஜக கட்சி கடிதம் அனுப்பி உள்ளது.

மத்திய பிரதேச முதல்வர் ஆனந்தி பென் பாட்டிலுக்கு பாஜக எழுதி உள்ள கடிதத்தில், காங்கிரசுக்கு மத்திய பிரதேசத்தில் மெஜாரிட்டி இல்லை. அதனால் அவர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.பாஜகவிர்க் சுயேட்சைகள் மற்றும் பகுஜன் சமாஜ் ஆதரவு இல்லை என்று பாஜக கூறியுள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் என்று அம்மாநில காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். எங்களுக்கு போதிய எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.

மத்தியில் ஆட்சி கவிழ போகும் விரக்தியில் பாஜக இருக்கிறது. அதனால் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க முயல்கிறார்கள். வாக்கெடுப்பு நடந்தால் காங்கிரஸ் அதில் வெற்றி பெரும் என்று என்று கமல்நாத் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

English summary
We are ready for floor test says MP CM Kamal Nath after BJP's letter to the governor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X