For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட நர்சுகள் 46 பேரும் விடுதலை - நாளை கொச்சி வருகை

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஈராக்கில் ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த இந்திய நர்சுகள் 46 பேரும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய

Indian nurses in Iraq are being freed: Chandy

விமானம் மூலமாக, நாளை காலை 7 மணிக்கு அனைவரும் கொச்சி வர உள்ளனர்.

ஈராக்கின் திக்ரிட் நகரில் உள்ள மருத்துவமனையொன்றில் பணியாற்றி வந்த தமிழகம், கேரளாவை சேர்ந்த 46 நர்சுகள் கடந்த மாதம் 11ம்தேதி முதல், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டனர். அதில் தூத்துக்குடியை சேர்ந்த நர்ஸ் மோனிஷா மட்டும் தமிழகத்தை சேர்ந்தவர். பிற நர்சுகள் கேரளத்தை சேர்ந்தவர்கள். தீவிரவாதிகளிடமிருந்து தங்கள் மகள்களை காப்பாற்றித்தர நர்சுகளின் பெற்றோர் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கைவிடுத்துவந்தனர்.

இந்நிலையில் 46 நர்சுகளும் நேற்றிவு மொசூல் நகருக்கு தீவிரவாதிகளால் இடமாற்றம் செய்யப்பட்டனர். அங்குள்ள ஒரு வீட்டில் நர்சுகள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக, நர்சுகள் அனைவரையும் தீவிரவாதிகள் இன்று விடுதலை செய்தனர். அவர்கள் ஈராக் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ராணுவ வாகனம் மூலமாக, 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எர்பில் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்து அனைவரையும் இந்தியா அழைத்துவர ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. ஏர் இந்தியா விமானம் மூலமாக, நாளை காலை 7

மணிக்கு அவர்கள் அனைவரும் கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்துவரப்படுகிறார்கள். இந்த தகவலை டெல்லியில் முகாமிட்டு நர்சுகளை திரும்ப அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் உறுதி செய்தார்.

English summary
Forty-six Indian women nurses held by Sunni insurgents in Iraq are being freed and will be flown to India soon, Kerala Chief Minister Oommen Chandy announced Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X