For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டாலும்... மனம் ஏற்க மறுக்கிறது... பிரதமர் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Sadhvi Pragya Singh Thakur: எதையாவது சர்ச்சையாக பேசி பாஜகவுக்கு தலைவலியாக மாறும் பிரக்யா!- வீடியோ

    போபால்: நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்' என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதை மன்னிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

    மத்திய பிரதேசத்தின், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக, பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் நிறுத்தப்பட்டுள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், காந்தியை சுட்டுக்கொன்ற நாதூரம் கோட்சே தேசபக்தர் என்றார். கமல்ஹாசன் பேச்சு பதிலளிக்கும் விதமாக பேசிய அவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையானது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கான 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது.

    பேசுவதெல்லாம் தப்பு.. தப்பு மட்டுமே.. பாஜகவின் மாபெரும் தலைவலியாக மாறும் பிரக்யா!பேசுவதெல்லாம் தப்பு.. தப்பு மட்டுமே.. பாஜகவின் மாபெரும் தலைவலியாக மாறும் பிரக்யா!

    100 முறை யோசிக்க வேண்டும்

    100 முறை யோசிக்க வேண்டும்

    இந்தநிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள கார்கோன் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், பிரக்யா சிங்கின் கருத்து மன்னிக்க முடியாது என கண்டனம் தெரிவித்தார். பேசுவதற்கு முன் 100 முறை யோசிக்க வேண்டும் என்றார்.

    இடைநீக்கம்

    இடைநீக்கம்

    பிரக்யா சிங் தாகூர் மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்க மனம் மறுக்கிறது என்றும் பேசினார். இதனிடையே, காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட 3 பேருக்கு பாஜக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. காந்தி பாகிஸ்தானின் தந்தை எனக் கூறிய அணில் சவுமித்ரா என்பவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    பகிரங்க மன்னிப்பு

    பகிரங்க மன்னிப்பு

    முன்னதாக, நாதுராம் கோட்சே குறித்து பிரக்யா சிங் பேசியது, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், கட்சிக்கு அவரின் பேச்சும் சம்பந்தம் இல்லை என்றும் விளக்கமளித்த பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், கடும் கண்டங்களை பதிவுசெய்தார். இதனைத் தொடர்ந்து, பிரக்யா சிங் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    இதற்கிடையே, கோட்சேவை தேச பக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் கூறிய விவகாரம் தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Prime Minister Modi Said that Pragya Singh Apologizes but refuses to accept it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X