For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் மசோதாவுக்கு ஆதரவு இல்லை- அரசியல் கட்சி தலைவர்களை விடுதலை செய்க: மமதா வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மத்திய பாஜக அரசின் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது; அம்மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் மாட்டோம் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது:

We cannot support Centres JK Bill, says Mamata Banerjee

ஜம்மு காஷ்மீர் தலைவர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் தனிமைப்படுத்துவதாக உணர்ந்துவிடக் கூடாது என்பதை அரசுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.

கைது செய்யப்பட்ட தலைவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாக்க அவர்களை உடனே மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும்.

மத்திய அரசின் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நாங்கள் ஆதரிக்கவும் முடியாது. அம்மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் மாட்டோம்.

லோக்சபாவில் பேசும்போது குறுக்கிட்ட அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்.. ஆவேசமான டி.ஆர்.பாலு.. கடும் விளாசல் லோக்சபாவில் பேசும்போது குறுக்கிட்ட அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்.. ஆவேசமான டி.ஆர்.பாலு.. கடும் விளாசல்

காஷ்மீர் மக்களுடனும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee sai that, "We cannot support this bill. We cannot vote for this bill. They should have spoken to all political parties and the Kashmiris".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X