For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுகவின் ஆதரவு வேண்டும்.. கோரிக்கை வைக்கும் சந்திரபாபு நாயுடு

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுகவின் ஆதரவு வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுகவின் ஆதரவு வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்து இருக்கிறார்.

ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்தது. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது.

We need ADMK support for no-confidence motion against Modi government says, Chandrababu Naidu

சிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்குதேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள். இந்த நிலையில் கூட்டணியில் இருந்தும் தெலுங்குதேசம் வெளியேறி இருக்கிறது.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது. ஆனால் இதை அவையில் தாக்கல் செய்ய விடாமல் அதிமுக கட்சி காவிரி பிரச்னையை எழுப்பி இருக்கிறது.

அதிமுக எம்பிக்களின் கோரிக்கையால் தினமும் அவை பாதியில் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுகவின் ஆதரவு வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.

தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவையில் பெரும்பான்மை கொண்டு இருக்கும் அதிமுக கட்சி ஆதரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
BJP did not fulfil any of its promises says, Chandrababu Naidu. Chandrababu Naidu's Telugu Desam quits NDA and already sought for a no-confidence motion against Modi government. We need ADMK support for a no-confidence motion against Modi government says Chandrababu Naidu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X