For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மது இல்லாத மாநிலத்தை உருவாக்குவோம்... சவ்கான் உணர்ச்சிகர பேச்சு

Google Oneindia Tamil News

போபால் : மது இல்லாத மாநிலமாக மத்திய பிரதேசத்தை மாற்ற விரும்புவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் தெரிவித்துள்ளார்.

கட்னி மாவட்டத்தில் அரசு திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற சிவராஜ் சிங் சவ்கான், மத்திய பிரதேசத்தை மது இல்லாத மாநிலமாக மாற்ற விரும்புகிறோம். இந்த அரசு மதுவை தடை செய்ய விரும்புகிறது. இது மதுவிலக்கால் மட்டும் முடியாது. மக்கள் குடிக்கும் வரை தொடர்ந்து மது விற்பனை செய்யப்படும். மக்கள் மது அருந்துவதை நிறுத்தி, நல்ல மாநிலமாக மாறும் வரை வரை மது விலக்கு பிரச்சாரத்தை தொடர்வோம். இதற்காக உறுதி ஏற்போம் என்றார்.

We Want to Make MP A Liquor-free State: Shivraj Singh Chouhan

தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் விநியோகம் நடைபெறும். ஏழை மக்கள் வீடு கட்டுவதற்காக பணம் வழங்கப்படும், ரூ.5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சைக்கான ஆயுஷ்மான் கார்டுகள் 3,25,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு மரணம் தண்டனை என அறிவித்த முதல் மாநிலம் மத்திய பிரதேசம். முஸ்கான் அபியான் திட்டத்தின் கீழ் கட்னியில் 50 பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. 37 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் கருணை மனு தாக்கல் செய்துள்ளனர் என்றார்.

பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த பிறகு கடந்த 5 ஆண்டுகளில் அரசு செய்த சாதனைகளை, நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு அவர் பேசினார்.

English summary
Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan on Saturday said that his government wants to ban liquor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X