For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உச்சகட்ட பரபரப்பு.. சற்றுநேரத்தில் முதல்வரை தேர்வு செய்வோம்.. கோவாவில் பாஜக அறிவிப்பு!

கோவாவில் இன்னும் 30 நிமிடத்தில் புதிய முதல்வரை அறிவிப்போம் என்று பாஜக கட்சி தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவாவில் யாருடைய ஆட்சி வரப்போகிறது?-வீடியோ

    பனாஜி: கோவாவில் இன்னும் 30 நிமிடத்தில் புதிய முதல்வரை அறிவிப்போம் என்று பாஜக கட்சி தெரிவித்துள்ளது.

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். கணைய புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.

    இந்த நிலையில் புதிய கோவா முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. யார் முதல்வராக வருவார் என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

    கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் காங்கிரஸ்.. ஆளுநரிடம் கடிதம்! கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் காங்கிரஸ்.. ஆளுநரிடம் கடிதம்!

    கோவா நிலை என்ன

    கோவா நிலை என்ன

    கோவாவில் மொத்தம் 40 சட்டசபை இடங்கள் உள்ளது. அதில் மனோகர் பாரிக்கரின் மறைவை அடுத்து மொத்தமாக 4 இடங்கள் காலியாக உள்ளது. பாஜகவிடம் 12 இடங்கள் உள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களை கொண்டுள்ளது. கோவா மாநில கட்சிகளான மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி 3 இடங்களையும், கோவா பார்வேர்ட் கட்சி 3 இடங்களையும், சுயேட்சைகள் மூன்று இடங்களை கொண்டு இருக்கிறார்கள்.

    எப்படி ஆட்சி

    எப்படி ஆட்சி

    இதற்கு முன் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில் மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி, கோவா பார்வேர்ட் கட்சி, சுயேட்சைகள் ஆகியவற்றின் ஆதரவுடன் பாஜக ஆட்சி நடத்தி வந்தது. ஆனால் இவர்களும் மனோகர் பாரிக்கர் முதல்வராக இருக்க மட்டுமே ஆதரவு தருவோம் என்று நிபந்தனையுடன் ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர். இந்த நிலையில்தான் மனோகர் பாரிக்கர் இயற்கை எய்தியுள்ளார்.

    நடக்குமா

    நடக்குமா

    தற்போது அங்கு இருக்கும் 36 இடங்களில் (4 காலி இடங்கள் போக) பெரும்பான்மை பெற 19 இடங்கள் தேவை. தற்போது பாஜகவிடம் 12 இடங்கள் உள்ளது. பாஜக பெரும்பான்மை பெற இன்னும் 7 இடங்கள் தேவை. இந்த நிலையில் மனோகர் பாரிக்கருக்கு ஆதரவு அளித்தது போல மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி, கோவா பார்வேர்ட் கட்சி, சுயேட்சைகள் பாஜகவிற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

    காங்கிரஸ் கடிதம்

    இந்த நிலையில்தான் நேற்று நள்ளிரவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் கோவா காங்கிரஸ் உறுப்பினர்கள் கடிதம் அளித்து இருக்கிறார்கள். அதே சமயம் பாஜகவும் அங்கு ஆட்சியை தொடர போகிறோம் என்று கூறி வருவதால் பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

    என்ன திருப்பம்

    தற்போது புதிய திருப்பமாக பாஜக அங்கு 2 மணிக்கு பின் புதிய முதல்வரை அறிவிப்போம் என்று கூறியுள்ளது. 3 மணிக்குள் புதிய முதல்வர் பதவி ஏற்பார் என்றும் பாஜக கூறியுள்ளது. பாஜக எந்த நம்பிக்கையில் இப்படி கூறியது, காங்கிரஸ் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

    English summary
    We will announce Parrikar Successor by 2 pm says BJP in Goa as, Congress stake claims in Goa to form the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X