For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி போர் வந்தால் பாகிஸ்தானை 4 துண்டாக இந்தியா உடைக்கும்.... சொல்வது சு.சுவாமி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யுத்தத்தை பிரகடனப்படுத்தாது; ஆனால் இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்தானை இந்தியா 4 நாடுகளாக பிளவுபடுத்திவிடும் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்தியாவுக்குதான் பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்துள்ளார்.

We will break Pakistan into 4 pieces, says Subramanian Swamy

பாகிஸ்தானின் இந்த மிரட்டல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

பாகிஸ்தானிடம் எந்த ஒரு வலிமையும் இல்லை. அது விரக்தியடைந்து போய் பலவீனமானதாக இருக்கிறது. அங்கே இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒரு பொம்மை அரசுதான்.

பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவுடன் யுத்தத்தை நடத்த விரும்பினால் நாமும் அதற்கு தயார்தான். ஆனால் நாம் எந்த ஒரு நாட்டுடனும் போர் பிரகடனத்தை வெளியிட்டதில்லை. நம்மை பிறநாடுகள்தான் போரில் வலிந்து தள்ளியிருக்கின்றன.

ஏற்கெனவே நடந்த ஒரு யுத்தத்தில் பாகிஸ்தான் 2 நாடுகளாக பிளவுபடுத்தப்பட்டது. இனி ஒரு முறை இந்தியாவுடன் பாகிஸ்தான் யுத்தம் நடத்தினால் அந்த நாடு 4 நாடுகளாக பிளவுபடுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

English summary
Following Pakistani troops' firing in Poonch, Kashmir, using rocket propelled grenades and mortars, Bharatiya Janata Party (BJP) leader Subramanian Swamy on Monday said that India would never want to declare a war against Pakistan.He also said that if Pakistan desires war, India is ready for it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X