For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்.. தெலுங்கு தேசம் கட்சி அதிரடி

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்- தெலுங்கு தேசம் முடிவு- வீடியோ

    ஹைதராபாத்: மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது.

    தெலுங்கு தேசம் கட்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு இடையே பிரச்சனை வலுத்து இருக்கிறது. ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்தது. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது.

    We will bring non-confidence motion against BJP once again says TDPs Chandrababu Naidu

    சிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதால் மத்திய அமைச்சரவை உடைந்தது.
    இதனால் அமைச்சரவையில் இருந்து தெலுங்குதேசம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள்.

    இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக கடந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

    ஆனால் அப்போது கடைசிவரை அவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. நீட், காவிரி பிரச்சனையால் தீர்மானம் தாக்கல் செய்யப்படாமல் போனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். அதோடு தனி தனியாக பாஜக அல்லாத கட்சியினரை சந்தித்து, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க கோரிக்கை வைக்க உள்ளார்.

    English summary
    We will bring a non-confidence motion against BJP once again by this monsoon session says TDP's Chandrababu Naidu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X