For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்க அந்த சிலையை உடைக்கவில்லை.. புதுசா கட்டிக்கொடுக்கிறோம்.. கொல்கத்தாவில் மோடி புது டிவிஸ்ட்!

கொல்கத்தாவில் மேற்கு வங்க புரட்சியாளர் வித்யாசாகரின் சிலையை பாஜக உடைக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தாவில் மேற்கு வங்க புரட்சியாளர் வித்யாசாகரின் சிலையை பாஜக உடைக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் நாள் கொல்கத்தா கல்லூரி சாலையில் உள்ள வித்யாசாகர் கல்லூரி அருகே பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேரணி செல்லும் கலவரம் உருவானது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் அந்த வித்யாசாகர் கல்லூரிக்குள் சென்று அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர்.

We will build a new statue for Ishwar Chandra Vidyasagar says, Modi

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அங்கு இருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசகரின் சிலையை அடித்து உடைத்தனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் மேற்கு வங்கத்தில் மிக மிக முக்கியமான தலைவர்.

அம்மாநிலத்தில் மிக முக்கிய புரட்சியாளராக இவர் பார்க்கப்படுகிறார். மேற்கு வங்கத்தில் நிறைய சீர் திருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறார். வித்யாசாகர் சிலையை உடைத்ததற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் குதித்து உள்ளது. இதற்கு எதிராக நேற்று மாலை அங்கு திரிணாமுல் பெரிய பேரணி நடத்தியது. இதை வைத்து மமதா தொடர் பிரச்சாரமும் செய்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி உள்ளார். அதில், நாங்கள் அந்த சிலையை உடைக்கவில்லை. கலவரத்தை அந்த சிலை உடைக்கப்பட்டு உள்ளது. அதை உடைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபர்கள்தான்.

2014-ல் கங்கையின் மகன்.. தற்போது ரஃபேல் ஏஜென்ட்.. மோடியை சரமாரியாக விமர்சித்த சித்து 2014-ல் கங்கையின் மகன்.. தற்போது ரஃபேல் ஏஜென்ட்.. மோடியை சரமாரியாக விமர்சித்த சித்து

அந்த கட்சியை சேர்ந்த குண்டர்கள்தான் சிலையை உடைத்தது. நாங்கள் வித்யாசாகரை அதிகம் மதிக்கிறோம். அவரின் கொள்கைக்காக நாங்கள் குரல் கொடுப்போம். சிலை உடைக்கப்பட்ட இடத்திலேயே நாங்கள் மிகப்பெரிய சிலையை நிறுவுவோம் என்பதை தெரிவிக்கிறேன், என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

English summary
We will build a new statue for Ishwar Chandra Vidyasagar in Kolkata says, Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X