For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களுடன் சுற்றும் இளைஞர்களை பிடிக்க மத்திய பிரதேசத்தில் புதிய படை.. பேரு ஆன்டி-மஜ்னுவாம்!

பெண்களுடன் சுற்றும் இளைஞர்களை பிடிக்க ஆன்டி-மஜ்னு என்ற புதிய படை அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

போபால்: பெண்களுடன் சுற்றும் இளைஞர்களை பிடிக்க ஆன்டி-மஜ்னு என்ற புதிய படை அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார். பெண்கள் பின்னாடி சுற்றும் இளைஞர்கள் நாகரிகமான சமூகத்திற்கு சரியானவர்கள் இல்லை என்றும் மத்திய பிரதேச முதல்வரான சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பெண்களுடன் சுற்றும் இளைஞர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெண்களுடன் சுற்றும் ஆண்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

We will reform the Majunu type of people : Shivraj Singh Chouhan

ஆன்டி-மஜ்னு எனப் அந்த அமைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளது. பெண்களுடன் சுற்றும் ஆண்களை பிடித்து அவர்கள் சரியான பாதையில் செல்ல கவுன்சிலிங் கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மஜ்னு மனநிலை படைத்த இளைஞர்கள், நாகரீகமான சமூகத்திற்கு சரியானவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பெண்களுடன் சுற்றும் இளைஞர்களை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்காகவே ஆண்டி மஜ்னு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் பெண்களுடன் சுற்றும் இளைஞர்களையும், பெண்களை கேலி செய்யும் இளைஞர்களையும் பிடிக்க, ஆண்டி ரோமியோ என்ற பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Madhya pradesh Chief minister Shivraj Singh Chouhan says that Majunu type of people don't know how to respect. And he said We will reform the Majunu type of people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X