For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவர்களை டெல்லியை விட்டே அனுப்புவோம்.. வாக்களியுங்கள்.. அமித் ஷா பேச்சு.. சிசோடியாவின் செம பதில்!

டெல்லியில் போராட்டங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காக, பாஜகவிற்காக வாக்களிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் போராட்டங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காக, பாஜகவிற்காக வாக்களிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சிஏஏ போராட்டங்கள் நாடு முழுக்க தீவிரம் அடைந்து வருகிறது. டெல்லியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு நடக்கும் போராட்டங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லியில் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் கடந்த 10 நாட்களாக தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள்.

குடியரசு தின நாளிலும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்- கைதாகிறார் ஷர்ஜீல் இமாம் குடியரசு தின நாளிலும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்- கைதாகிறார் ஷர்ஜீல் இமாம்

ஷாஹீன் பாக் போராட்டம்

ஷாஹீன் பாக் போராட்டம்

ஷாஹீன் பாக் பகுதியில் கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை இங்கு தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்தியாவில் நடக்கும் சிஏஏ போராட்டத்திற்கு இது மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது. இந்த போராட்டத்தை பெண்கள்தான் நடத்தி வருகிறார்கள். இன்று குடியரசுத் தினத்தை முன்னிட்டு, ஷாஹீன் பாக் பகுதியில் கொடி ஏற்றப்பட்டது. 2 லட்சம் பேர் வரை இந்த போராட்டத்தில் இன்று கலந்து கொண்டனர்.

டெல்லி தேர்தல்

டெல்லி தேர்தல்

டெல்லியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லி தேர்தலில் இந்த போராட்டம் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும். 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது.

அமித் ஷா பிரச்சாரம்

அமித் ஷா பிரச்சாரம்

இந்த தேர்தலுக்காக டெல்லியில் பிரச்சாரம் செய்து வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பேசியதாவது, டெல்லியில் மாசு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், பாஜகவிற்காக வாக்களியுங்கள். டெல்லியில் இருக்கும் மாசுக்கு காரணமே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்கள்தான். இவர்கள்தான் டெல்லியின் தற்போதையை நிலைக்கு காரணம். பாஜக விரைவில் இவர்களை எல்லாம் நாட்டை விட்டு வெளியேற்றும்.

கெஜ்ரிவால் எப்படி

கெஜ்ரிவால் எப்படி

சிஏஏ சட்டத்துக்கு கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரின் இந்த செயல் கோவம் தருகிறது. மக்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார். பாஜக பல தேர்தல்களை வென்று இருக்கிறது. கஷ்டமான தேர்தல்களை கூட வென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாஜகவின் சைபர் படைதான். இணையத்தில் அவர்கள்தான் பாஜகவை வெல்ல வைக்கிறார்கள். டெல்லியில் ஷாஹீன் பாக் போன்ற போராட்டங்கள் நடக்கமால் இருக்க பாஜகவிற்கு வாக்களியுங்கள்.

ஷாஹீன் பாக் எப்படி

ஷாஹீன் பாக் எப்படி

ஷாஹீன் பாக் போராட்டங்களை பாஜக ஆட்சிக்கு வந்தால் கட்டுப்படுத்தும். அவர்களை டெல்லியை விட்டே அனுப்புவோம் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். இதற்கு டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடிய பதில் அளித்துள்ளார். அதில், டெல்லியில் போலீஸ் அமித் ஷா கட்டுப்பாட்டில்தான இருக்கிறது. அவர் நினைத்தால் இப்போது கூட, போராட்டங்களை கட்டுப்டுத்தலாம். தேர்தலுக்காக அவர் மக்களை ஏமாற்ற பார்க்கிறார். அவர் போராட்டங்களை பார்த்து அஞ்சுகிறார், என்று சிசோடியா கூறியுள்ளார்.

English summary
We will send those who protest in Shaheen Bagh out says Amit Shah on CAA protest row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X