For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் பத்மாவத் படத்தை திரையிட மாட்டோம்.. மல்டிபிளக்ஸ் சங்கம் அறிவிப்பு

குஜராத்தில் பத்மாவத் படத்தை திரையிட மாட்டோம் என்று மல்டிபிளக்ஸ் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

மும்பை: குஜராத்தில் பத்மாவத் படத்தை திரையிட மாட்டோம் என்று மல்டிபிளக்ஸ் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்த வரலாற்றுத் திரைப்படமான பத்மாவத்க்கு பெரிய எதிர்ப்பு நிலவி வருகிறது. ராஜஸ்தானின் சித்தூர் அரசி பத்மாவதி குறித்த வரலாற்றுப் படம் என்பதால் ராஜஸ்தானை சேர்ந்த பாஜக கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

We won't screen Padmaavat - Gujarat multiplex association

இந்தப்படம் வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி ராஜ்புத் கார்னி சேவா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. மேலும் அந்த படத்த்தின் போஸ்டர்கள் கூட தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இந்தப்படம் திட்டமிடப்பட்டுள்ள வெளியானால் மாநிலத்தில் பெரும் போராட்டம் உருவாக வாய்ப்பு இருப்பதாக பாஜக ஆளும் பகுதிகளில் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் இன்று வெளியானது.

ஆனாலும் படம் வெளியான பல இடங்களில் கலவரம் நடந்து வருகிறது. இதனால் குஜராத்தில் பத்மாவத் படத்தை திரையிட மாட்டோம் என்று மல்டிபிளக்ஸ் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

பாதுகாப்பு காரணம் கருதி திரையிடல் இல்லை என்று கூறியுள்ளது. படம் திரையிடப்பட்டால் தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மல்டிபிளக்ஸ் சங்கம் அறிவித்துள்ளது.

English summary
The release of Sanjay Leela Bhansali's 'Padmaavat' has got a new problem in Gujarat. Gujarat multiplex association says that they won't screen Padmaavat due to safety problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X